ஆரோக்கியம்

Mango Lassi Recipe: மாம்பழ பிரியர்களுக்கு சுவையான மாம்பழ லஸ்ஸி ரெசிபி!

Published

on

மாம்பழங்கள் கோடையின் ஹீரோக்கள். கோடையில் மிகவும் இனிப்பான மாம்பழங்களைக் கொண்டு பலவிதமான இனிப்பு வகைகளைச் செய்துகொடுத்தால், அனைவரும் இதை மிகவும் விரும்பி பருகுவார்கள்.

பொதுவாக கோடை காலம் வந்தால் உடல் சூட்டை தணிக்க பலர் பழச்சாறுகளை விரும்பி பருகுவார்கள். அதன்படி, கோடைக் காலத்தில் சாலையோரங்களில் ஆங்காங்கே புதிய பழச்சாறுகள் விற்கும் கடைகளை நாம் பார்க்கலாம். அந்த அளவுக்கு கோடை காலம் வந்துவிட்டால் பழச்சாறுகளுக்கு காதல் தானாகவே கூடி விடும். அத்தகைய ஒரு பானம் பிரபலமான மாம்பழ லஸ்ஸி ஆகும்.

மாம்பழம் லஸ்ஸி

மாம்பழம் ஒரு பருவகால பழம் மற்றும் இந்தியாவில் கோடை காலத்தில் அறுவடை செய்யப்படுகிறது. மாம்பழ சீசன் குறுகிய காலம், சிறந்த இயற்கை முறையில் பழுத்த மாம்பழங்கள் ஏப்ரல் முதல் ஜூன் வரை கிடைக்கும். உச்ச பருவத்தில் அறுவடை செய்யப்படும் மாம்பழங்கள் மிகவும் இனிமையான ஒரு சுவையைக் கொண்டிருக்கும். இதனால்தான் இந்த மாம்பழங்களைக் கொண்டு தயாரிக்கப்படும் மாம்பழ லஸ்ஸிக்கு தனி ரசிகர் கூடமேயுள்ளது.

இப்போது சுவையான மற்றும் விரைவாக செய்யக்கூடிய மாம்பழ லஸ்ஸி ரெசிபியைப் பார்ப்போமா!

தேவையான பொருட்கள்:

  • 1 மாம்பழம்
  • 1 கப் தயிர்
  • ½ கப் பால்
  • ½ மேஜைக்கரண்டி ஏலக்காய் தூள்
  • 1 மேஜைக்கரண்டி பாதாம்
  • 1 மேஜைக்கரண்டி பிஸ்தா
  • ½ மேஜைக்கரண்டி குங்கும பூ
  • தேவையான அளவு சர்க்கரை
  • தேவையான அளவு ஐஸ் க்யூப்ஸ்

மாம்பழம் லஸ்ஸி செய்முறை:

  1. முதலில் மாம்பழம், பாதாம், மற்றும் பிஸ்தாவை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி, மற்றும் ஏலக்காயை தூள் செய்து எடுத்து வைத்து கொள்ளவும்.
  2. அடுத்து ஒரு பாத்திரத்தை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் அரை லிட்டர் அளவு பாலை ஊற்றி அதை நன்கு காய்ச்சி பின்பு அடுப்பை அணைத்து விட்டு அதை சிறிது நேரம் ஆற விடவும்.
  3. பிறகு நாம் நறுக்கி வைத்திருக்கும் மாம்பழத்தை எடுத்து அதை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு அதனுடன் 4 லிருந்து 6 மேஜைக்கரண்டி அளவு தண்ணீர் ஊற்றி ஒரு சுற்று சுற்றி கொள்ளவும்.
  4. பின்னர் அதில் ஒரு கப் அளவு தயிரை ஊற்றி அதை நன்கு அரைத்து கொள்ளவும்.
  5. பின்பு அதில் நாம் காய்ச்சி ஆற வைத்திருக்கும் பால், அவரவர் விருப்பத்திற்கேற்ப சர்க்கரை, மற்றும் நாம் தூள் செய்து வைத்திருக்கும் ஏலக்காய் தூளிலிருந்து சுமார் அரை மேஜைக்கரண்டி அளவு சேர்த்து அதை நன்கு அரைத்து கொள்ளவும்.
  6. லஸ்ஸி கெட்டியாக இருந்தால் அதில் சிறிதளவு பால் அல்லது தண்ணீர் சேர்த்து அதை மீண்டும் அரைத்து கொள்ளவும்.
  7. அடுத்து ஒரு கிளாஸ் டம்ப்ளரை எடுத்து அதில் அவரவருக்கு விருப்பமான அளவு ஐஸ் க்யூப்ஸ்ஸை போட்டு பின்பு நாம் அரைத்த லஸ்ஸியை அதில் ஊற்றவும்.
  8. பிறகு அதன் மேலே நாம் நறுக்கி வைத்திருக்கும் பிஸ்தா, பாதாம், மற்றும் குங்குமப்பூவை தூவி அதை சில்லென்று பரிமாறவும்.
  9. இப்பொழுது உங்கள் அருமையான சில்லென்று இருக்கும் மாம்பழம் லஸ்ஸி தயார். இதை கட்டாயம் உங்கள் வீட்டில் செய்து பார்த்து உங்கள் குடும்பத்தாருடன் சேர்ந்து பருகி மகிழுங்கள்.
author avatar
seithichurul

Trending

Exit mobile version