ஆரோக்கியம்

சுவையான சிக்கன் கட்லெட்.. ஒருமுறை இப்படி செஞ்சு பாருங்க!

Published

on

பிள்ளைகள் பள்ளி முடிந்து வீட்டிற்கு வரும் போது, அவர்கள் விரும்பி சாப்பிடும் ஏதாவது சுவையான ஈவினிங் ஸ்நாக்ஸ் கொடுக்க விரும்புகிறீர்களா? அதுவும் சிக்கன் வைத்து செய்யக்கூடியவை என்றால், சிக்கன் கட்லெட் மிக சிறந்த தேர்வு. இது குழந்தைகளின் பறவைகளை ஆச்சர்யப்படுத்தும் ஒரு ருசியான மற்றும் வேகமாக செய்யக்கூடிய ரெசிபி ஆகும்.

சிக்கன் கட்லெட்டிற்கு தேவையான பொருட்களும் மிக எளிமையானவை, மேலும் இது மிக விரைவாக செய்து முடிக்கலாம். இந்த சிக்கன் கட்லெட், உங்களது குழந்தைகள் விரும்பும் ஈவினிங் ஸ்நாக்ஸ் ஆக மாறும் என்பதில் சந்தேகமில்லை.

சிக்கன் கட்லெட் செய்ய தேவையான பொருட்கள்:

எலும்பில்லாத சிக்கன் – 500 கிராம்
உருளைக்கிழங்கு – 250 கிராம் (வேக வைத்தது)
இஞ்சி பச்சை மிளகாய் விழுது – 2 ஸ்பூன்
பெரிய வெங்காயம் – 100 கிராம் (நறுக்கியது)
கறிவேப்பிலை – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு
மிளகு தூள் – 1 ஸ்பூன்
ரொட்டி தூள் – 50 கிராம்
எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை:

  • முதலில், சிக்கனை நன்கு கழுவி, மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளுங்கள்.
  • வேகவைத்த உருளைக்கிழங்கை நன்றாக மசித்து வைக்கவும்.
  • கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி, வெங்காயம், இஞ்சி பச்சை மிளகாய் விழுது, மற்றும் கறிவேப்பிலை சேர்த்து நன்றாக வதக்கவும்.
  • பின், மசித்த உருளைக்கிழங்கு, அரைத்த சிக்கன், மிளகு தூள், மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கிளறி, வறுக்கவும். பிறகு அதை ஆற விடவும்.
  • கலவையை உருண்டைகளாக பிடித்து, கையில் தட்டி, ரொட்டி துகள்கள் மீது பிரட்டி தட்டில் வைக்கவும்.
  • தோசை கல்லில் எண்ணெய் விட்டு, தட்டி வைத்த கட்லெட்டுகளை இருபுறமும் பொன்னிறமாக வேகவிடவும்.
  • அவ்ளோதான், சுவையான சிக்கன் கட்லெட் ரெடி! உங்கள் குழந்தைகள் இதை விரும்பி சாப்பிடுவார்கள்.

 

Poovizhi

Trending

Exit mobile version