இந்தியா

டெல்லியில் ஓலா, ஊபர், ரேப்பிடோ பைக் டாக்ஸி சேவைக்கு தடை.. டெல்லி போக்குவரத்துத் துறை நடவடிக்கை!

Published

on

டெல்லியில் ஓலா, ஊபர், ரேப்பிடோ பைக் டாக்ஸி சேவைக்குத் தடை விதித்துள்ளது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆட்டோ, டாக்ஸிகளை விட குறைந்த கட்டணத்திலும், டிராப்பிக் சமயங்களில் எளிதாகச் செல்லவும் ஓலா, ஊபர், ரேப்பிடோ பைக் டாக்ஸி சேவைகள் மக்களுக்கும் பெரும் பயனை வழங்கி வருகின்றன.

இந்நிலையில் டெல்லி போக்குவரத்துத் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஓலா, ஊபர், ரேப்பிடோ பைக் டாக்ஸி சேவைகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

Delhi Transport Department Banned Uber, Ola And Rapido Bike Taxi With Immediate Effect

அதில், போக்குவரத்து அல்லாத (தனியார்) பதிவு முத்திரை/எண்களைக் கொண்ட இரு சக்கர வாகனங்கள் பயணிகளை வாடகைக்கு ஏற்றிச் செல்லப் பயன்படுத்தப்படுகின்றன. இது மோட்டார் வாகனச் சட்டம், 1988-ஐ மீறுவதாகும்.

இந்த அறிவிப்பை மீறித் தொடர்ந்து பைக் டக்ஸி சேவைகளை வழங்கினால் வாகன ஓட்டுநருக்கு முதல் முறை 5 ஆயிரம் ரூபாயும், 2வது முறை 10 ஆயிரம் ரூபாய் மற்றும் சிறைத் தண்டனையும் விதிக்கப்படும். மேலும் தொடர்ந்தால் 3 வருடங்களுக்கு ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும்.

இப்படி முறையான அனுமதி இல்லாத வாகனங்கள் மூலம் டாக்ஸி சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version