இந்தியா

மணிக்கு 320கிமீ வேகம்: 2 மணி நேரத்தில் டெல்லி – அயோத்தியா புல்லட் ரயில்!

Published

on

டெல்லியிலிருந்து அயோத்தியா செல்லும் புல்லட் ரயில் ஒன்று 320 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்க திட்டமிடப்பட்டு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலத்தின் சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில் அவற்றில் ஒரு பகுதியாக டெல்லி – அயோத்தியா இடையே புல்லட் ரயில் சேவை பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.

இந்த புல்லட் ரெயில் திட்டமானது மொத்தம் 670 கிலோ மீட்டர் தூரம் கொண்டது என்றும் இந்த தூரத்தை கிட்டத்தட்ட இரண்டு மணி நேரத்தில் கடக்கும் வகையில் மணிக்கு 320 கிலோ மீட்டர் வேகத்தில் புல்லட் ரெயில் இயக்கப்பட உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்திற்காக நிலம் கையகப்படுத்தும் பணிகள் தற்போது நடைபெற்று வருவதாகவும் இந்தத் திட்டத்திற்கான நிலங்கள் அடையாளம் காணப்பட்டு நிலம் கையகப்படுத்தப்பட்டவுடன் நிலத்துக்கு சொந்தக்காரர்களிடம் இருந்து ஒப்புதல் பெறப்பட்டு, அதன் பின்னர் பணிகள் தொடங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டமானது ஏழு முதல் எட்டு ஆண்டுகளில் பயன்பாட்டுக்கு வரும் என உத்தரப்பிரதேச மாநில அரசு தெரிவித்துள்ளது.

இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டால் டெல்லியில் இருந்து அயோத்தியாவுக்கு சுமார் 2 மணி நேரத்தில் சென்று விடலாம் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது டெல்லியில் இருந்து அயோத்தியா செல்லும் ரயில்கள் சுமார் 11 மணி நேரத்தில் செல்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் புல்லட் ரயிலில் விரிவாக்கத் திட்டத்தின்படி டெல்லி – வாரணாசி இடையே 941 கிலோமீட்டர் பாதை ஒன்றும் அமைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
seithichurul

Trending

Exit mobile version