இந்தியா

டெல்லியில் குவியும் பிணங்கள்: சுடுகாடாக மாறிய பூங்கா!

Published

on

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது என்பதை ஏற்கனவே பார்த்து வருகிறோம். குறிப்பாக தலைநகர் டெல்லியில் தினமும் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

கடந்த 24 மணி நேரத்தில் டெல்லியில் 20,201 பேர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் 380 பேர் பலியாகி உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்த நிலையில் கொரோனா பாதித்து பலியானவர்களின் உடலை தகனம் செய்ய 24 மணி நேரமும் சுடுகாடுகளில் கூட்டம் அலைமோதுகிறது.

இந்த நிலையில் டெல்லியில் கொரோனாவால் பலியானவர்களின் உடல் அதிக அளவில் வருவதை அடுத்து முக்கிய பூங்கா ஒன்றை சுடுகாடாக அம்மாநில நிர்வாகம் மாற்றியுள்ளது. தென் கிழக்கு டெல்லியில் உள்ள சாராய் காலே கான் என்ற பகுதியில் உள்ள பொழுதுபோக்கு பூங்காவில் தற்போது தகன மேடை அமைக்கப்பட்டு உடல்கள் தகனம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

டெல்லியில் கொரோனாவால் பலியானவர்களின் உடல்கள் குவிந்து வருவதை அடுத்து ஒரு பூங்காவே சுடுகாடாக மாறி உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

author avatar
seithichurul

Trending

Exit mobile version