இந்தியா

டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை: பாஜக ஆட்சி இல்லாத 4 தலைநகரங்கள்!

Published

on

இந்தியாவின் பல மாநிலங்களில் பாஜக ஆட்சி செய்தாலும் மத்தியில் இரண்டு முறை தொடர்ச்சியாக ஆட்சி செய்தாலும் இந்தியாவில் உள்ள நான்கு முக்கிய மாநிலங்களில் பாஜக ஆட்சி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே டெல்லி மற்றும் மகாராஷ்டிராவில் பாஜக ஆட்சி இல்லை என்ற நிலையில் தற்போது மேற்குவங்கம் மற்றும் தமிழகத்திலும் பாஜக ஆட்சி இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள 4 முக்கிய நகரங்களான டெல்லி, மும்பை, கொல்கத்தா மற்றும் சென்னை ஆகிய தலைநகரங்களாக இருக்கும் டெல்லி, மகாராஷ்டிரா, மேற்கு வங்கம் மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் பாஜக தோல்வி அடைந்துள்ளது என்பதும் இதில் மகாராஷ்டிரா தவிர மற்ற மூன்று மாநிலங்களில் பாஜக ஆட்சி அமைக்க வாய்ப்பே இல்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

பாஜகவுக்கு மக்களிடையே அதிருப்தி வளர்ந்து கொண்டே வருவதால் மத்தியிலும் பாஜக ஆட்சியை இழக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை என்றும் அரசியல் கட்சியினர் கூறி வருகின்றனர்.

வரும் 2024 ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் பாராளுமன்ற தேர்தலில் நிச்சயம் பாஜக ஆட்சியை இழக்கும் என்றும் மம்தா பானர்ஜி தலைமையில் ஒரு மெகா கூட்டணி ஆட்சி அமைக்கும் என்றும் இப்போதே அரசியல் விமர்சகர்கள் கருத்து கூறி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version