இந்தியா

டெல்லியில் இன்று முதல் மின்சார பேருந்து இயக்கம்: ஆனால் இவர்கள் மட்டுமே பயணம் செய்ய முடியும்!

Published

on

பெட்ரோல் மற்றும் டீசல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கிறது என்பதால் மின்சாரம் வாகனங்களை உருவாக்கும் முயற்சியில் பல தொழிற்சாலைகள் முயற்சி செய்து வருகின்றன என்றும் ஒரு சில தொழிற்சாலைகள் மின்சார இருசக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்களை தயாரித்து விற்பனை செய்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த பத்து முதல் இருபது ஆண்டுகளில் முற்றிலுமாக பெட்ரோல் டீசல் வாகனங்களுக்கு பதிலாக மின்சார வாகனங்கள் தான் சாலையில் செல்லும் நிலை ஏற்படும் என்றும் நிபுணர்கள் கணித்துள்ளனர். இந்த நிலையில் இந்தியாவிலும் ஆங்காங்கே மின்சார இருசக்கர வாகனங்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது முதல் முதலாக டெல்லியில் மின்சார பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

டெல்லியில் இன்று முதல் மின்சார பேருந்துகளை மெட்ரோ நிர்வாகம் இயக்க உள்ளது. ஆனால் இந்த பேருந்தில் அனைத்து பணிகளும் பயணம் செய்ய முடியாது என்றும் மெட்ரோ ரயில் பயண அட்டை உள்ளவர்கள் மட்டுமே பயணம் செய்ய முடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

முதல் கட்டமாக சோதனை முயற்சியில் பயணிகளை அவர்கள் இருக்கும் இடங்களில் இருந்து அவர்கள் செல்ல விரும்பும் ஒரு குறிப்பிட்ட வழித்தடங்களில் மட்டும் இந்த பேருந்து இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு நேரடியாக இந்த பேருந்து செல்லும் என்றும் வழியில் எங்கேயும் நிற்காது என்றும் இடையில் யாரும் இந்த பேருந்தில் ஏற முடியாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதே நேரத்தில் இன்னும் ஒரு சில மாதங்களில் அனைத்து பயணிகளும் பயன்படுத்தும் அளவில் இந்த மின்சார பேருந்து இயக்கப்பட்ட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

 

https://twitter.com/MetroRailNewsIN/status/1425416395093725188

Trending

Exit mobile version