இந்தியா

ஆன்லைன் வேலைக்கு விண்ணப்பித்த நபர்.. நூதன மோசடியால் ரூ.9 லட்சம் இழந்த பரிதாபம்..!

Published

on

ஆன்லைன் வேலைக்கு விண்ணப்பித்த நபர் ஒருவர் துரதிஷ்டவசமாக ரூபாய் 9 லட்சத்தை இழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. டெல்லியை சேர்ந்த நபர் ஒருவர் வீட்டில் இருந்து வேலை செய்ய ஆன்லைன் வேலைக்கு விண்ணப்பித்ததாகவும் அவர் அந்த வேலைக்காக ஒரு லிங்க்கை கிளிக் செய்ததாகவும், அதனால் அவர் 9 லட்சம் பணத்தை இழந்ததாகவும் டெல்லி சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் வசிக்கும் ஹரீம் பன்சால் என்பவர் சமூக ஊடகங்களில் ஆன்லைன் மூலம் வேலை தேடி உள்ளார். அப்போது அவர் குறைந்த நேரத்தில் வேலை செய்தால் பெரும் பணம் சம்பாதிப்பது குறித்த விளம்பரத்தை பார்த்து உள்ளார். இதனை அடுத்து அந்த விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள வாட்ஸ் அப் எண்ணுக்கு அவர் தொடர்பு கொண்ட போது அவருக்கு ஒரு லிங்க் அனுப்பப்பட்டுள்ளது. அந்த லிங்கை அவர் க்ளிக் செய்த நிலையில் அவர் ஒரு இணையதளத்தில் பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்.

வீட்டில் இருந்து வேலை செய்யும் ஒரு இணையதளம் என்றும் அவருக்கு கொடுக்கப்பட்ட பணியை முடித்தால் அவருக்கு கமிஷன் கொடுக்கப்படும் என்றும் அதற்காக அவர் டெபாசிட் பணம் செலுத்த வேண்டும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை அடுத்து அவர் டெபாசிட் பணம் செலுத்திய நிலையில் அவர் செய்த வேலைக்கு ஒரு சிறிய தொகை கமிஷனாக கொடுக்கப்பட்டது.

இதனை அடுத்து அதிக பணம் டெபாசிட் செய்தால் அதிக வருமானம் தரும் வேலை கிடைக்கும் என்று மோசடி செய்பவர்கள் கூறியதை நம்பியவர் 9 லட்சத்து 32 ஆயிரம் ரூபாய் டெபாசிட் செய்தார். ஆனால் அவர் செய்த பணிக்கான பணம் வரவில்லை என்பதை அடுத்து அவர் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தார். இதனை அடுத்து அவர் டெல்லி காவல்துறையினரிடம் புகார் செய்துள்ள நிலையில் இந்த புகாரின் அடிப்படையில் விசாரணை செய்த காவல்துறையினர் இரண்டு பேரை கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

இது போன்று ஆன்லைன் வேலை தருவதாக கூறி பண மோசடி செய்வது இது முதல் முறை அல்ல என்றும் இது குறித்த விழிப்புணர்வு காவல்துறையினரால் ஏற்படுத்தி வந்தபோதிலும் பலர் தொடர்ந்து பணத்தை இழக்கும் சம்பவங்கள் நடந்து வருகின்றன என்றும் காவல்துறையினர் தெரிவித்து வருகின்றனர். ஆன்லைன் வேலையை பொருத்தவரை எந்தவித டெபாசிட் தொகையும் கேட்கப்படாது என்றும் அவ்வாறு பணம் கேட்கப்பட்டாலே அது மோசடியான நிறுவனம் என்பதை பொதுமக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

seithichurul

Trending

Exit mobile version