Connect with us

வணிகம்

2022ல் திருமண கொண்டாட்டம்… இந்தியாவில் அதிக திருமணம் நடந்தது இந்த நகரில் தான்!

Published

on

2020 மற்றும் 2021 ஆகிய இரண்டு ஆண்டுகள் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்ததால் ஏராளமான திருமணங்கள் ஒத்திவைக்கப்பட்டிருந்த நிலையில் 2022 ஆம் ஆண்டு அதிக திருமணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக திருமண இணையதளங்கள் தெரிவித்துள்ளன.

இந்தியாவில் அதிக திருமணங்கள் நடந்த நகரங்களின் பட்டியல் தற்போது வெளியாகியுள்ள நிலையில் அதில் தலைநகர் டெல்லி முதல் இடத்தை பிடித்து இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

திருமணம் என்பது ஆயிரம் காலத்து பயிர், வாழ்க்கையில் ஒரே ஒரு முறை மட்டுமே நடைபெறும் நிகழ்வு என்பதால் பலர் திருமணங்களை விசேஷமான கொண்டாட்டங்களாக ஏற்பாடு செய்துள்ளார்கள். இரண்டு ஆண்டு கொரோனா வைரஸ் பாதிப்புக்கு பின்னர் 2022 ஆம் ஆண்டு மீண்டும் திருமண விழாக்கள், திருமண கொண்டாட்டங்கள் பிரம்மாண்டமாக நடந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

திருமண இணையதளம் ஒன்றின் கணக்கின்படி 2022 ஆம் ஆண்டு 48% அதிகமாக திருமணம் நடந்துள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளது. மேலும் திருமணம் செய்வதற்கான இடங்கள், அரங்குகள் ஆகியவைகளின் தேடல்கள் 56 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும் அந்த இணையதளம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் அதிக திருமணம் நடந்த முதல் மூன்று நகரங்களின் பட்டியலில் டெல்லி முதலிடத்தையும் பெங்களூர் மற்றும் மும்பை ஆகியவை இரண்டாவது, மூன்றாவது இடத்தையும் பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. திரிபுரா, நாகலாந்து, இம்பால்ஆகியவை மிகவும் குறைவான திருமணங்களை பதிவு செய்த பகுதிகளாக கணக்கெடுக்கப்பட்டுள்ளன.

இரண்டாம் அடுக்கு, மூன்றாம் அடுக்கு நகரங்களிலும் திருமணம் மிகவும் விசேஷமாகவும் கொண்டாட்டமாகவும் நடந்துள்ளது என்றும் குறிப்பாக ஜெய்ப்பூர், குர்கான் ஆகிய பகுதிகளில் அதிகமான திருமணங்கள் நடந்ததாகவும் அந்த இணையதளம் தெரிவித்துள்ளது. இதில் மிகவும் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் டிசம்பர் மாத குளிரிலும் ஏராளமான திருமணங்கள் நடந்துள்ளது என்பதுதான் குறிப்பிடத்தக்கது. இந்த அறிக்கையின்படி டிசம்பர் மாதம் அதிகபட்சமாக 21% திருமணம் நடந்துள்ளதாகவும் அதே போல் பிப்ரவரி மாதம் 15 .49 சதவீதம் திருமணம் நடந்துள்ளதாகவும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது. குறிப்பாக டிசம்பர் இரண்டாம் தேதி அதிகபட்சமான திருமணம் நாடு முழுவதும் நடந்துள்ளதாக தெரிவித்துள்ளது.

மேலும் திருமண தேதியை தேர்ந்தெடுக்கும் தம்பதிகள் வார இறுதி நாட்களையே அதிகம் தேர்ந்தெடுத்ததாகவும் கூறப்படுகிறது. குறிப்பாக வெள்ளி இரவு மற்றும் சனி ஞாயிறு ஆகிய நாட்களில் தான் ஏராளமான திருமண மண்டபங்கள் ரிசார்டுகள் ஆகியவை புக் செய்யப்பட்டுள்ளதாக அந்த இணையதளம் தெரிவித்துள்ளது.

டெல்லி, பெங்களூர், மும்பை ஆகிய பகுதிகளை அடுத்து ஜெய்ப்பூ, உதய்பூர் மற்றும் கோவா ஆகிய பகுதிகளிலும் ஏராளமான திருமணங்கள் நடந்துள்ளன. வெளிநாடுகளை பொருத்தவரை சிங்கப்பூர், அபுதாபி மற்றும் நியூயார்க் ஆகிய மூன்று பகுதிகளில் அதிகமான திருமணங்கள் நடந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

திருமணத்தின்போது அதிக தேவை இருந்தது என்பதை எடுத்துக் கொண்டோம் என்றால் திருமணம் மண்டபம் மற்றும் ரிசார்ட் தான் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து திருமண புகைப்படக்காரர்கள், ஒப்பனை கலைஞர்கள் ஆகியவர்களின் தேடல் அதிகமாக இருந்துள்ளது.

மொத்தத்தில் 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளை ஒப்பிடுகையில் 2022 ஆம் ஆண்டில் ஏராளமான திருமணங்கள் நடந்துள்ளன என்பதும் அதேபோல் திருமண பட்ஜெட்டும் கடந்த ஆண்டு உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 2021 ஆம் ஆண்டில் திருமணத்திற்கான சராசரி பட்ஜெட் ரூ.21 லட்சம் என்றும் ஆனால் 2022-ல் அது ரூ.28 லட்சத்தை எட்டியதாகவும் அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.

இந்தியாவின் பொருத்தவரை திருமணம் என்பது ஒரு விழாவாக கொண்டாடப்பட்டு வருவதால் இந்த ஆண்டு உள்பட இனிவரும் ஆண்டுகளிலும் திருமணங்கள் அதிக செலவுடன் பிரம்மாண்டமாகவும் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

author avatar
seithichurul
வணிகம்3 மணி நேரங்கள் ago

ஜியோவின் புதிய OTT திட்டங்கள்: அதிரடி சலுகைகள்!

தமிழ்நாடு4 மணி நேரங்கள் ago

ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சியால் போக்குவரத்து மாற்றம்!

வேலைவாய்ப்பு4 மணி நேரங்கள் ago

அரசு வேலைக்கு தட்டச்சு பயிற்சி அவசியம்: தேர்வர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

ஆன்மீகம்4 மணி நேரங்கள் ago

சனி பகவானின் ஆசிர்வாதம்: கிச்சடி உணவின் ஆன்மீக முக்கியத்துவம்!

இந்தியா5 மணி நேரங்கள் ago

ஐபோன் விலையில் அதிரடி குறைப்பு!

வேலைவாய்ப்பு6 மணி நேரங்கள் ago

ESIC ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

செய்திகள்6 மணி நேரங்கள் ago

BSNL-க்கு மாறி வருகிறார்கள்: ஜியோ, ஏர்டெல் கவலை!

சினிமா6 மணி நேரங்கள் ago

ராயன் படத்தின் முதல் நாள் வசூல் கலக்கு! ரூ.12 கோடிக்கும் மேல்!

வேலைவாய்ப்பு6 மணி நேரங்கள் ago

ரூ.35,000/- சம்பளத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்6 மணி நேரங்கள் ago

வேப்பிலை முதல் துளசி வரை: இயற்கையின் இரத்த சர்க்கரை கட்டுப்பாட்டு மருந்துகள்!

பல்சுவை5 நாட்கள் ago

“கேரளா ஸ்டைல் கடலை கறி: சுவையான மற்றும் சத்தான குழம்பு”!

வணிகம்4 நாட்கள் ago

மின்னல் வேகத்தில் குறையும் தங்கம் விலை (23/07/2024)!

வணிகம்3 நாட்கள் ago

திடீர் எனச் சரிந்து வரும் தங்கம் விலை (24/07/2024)!

வணிகம்7 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலையில் மாற்றமில்லை (21/07/2024)!

வணிகம்4 நாட்கள் ago

பட்ஜெட் 2024-25-இல் ஸ்டார்ட்அப்-களுக்கு அடித்த ஜாக்பாட்!

வேலைவாய்ப்பு6 நாட்கள் ago

3,789 கிராம அஞ்சல் பணியாளர் பணியிடங்கள்: தமிழ்நாட்டில் அபார வாய்ப்பு!

வணிகம்5 நாட்கள் ago

2024 பட்ஜெட்: விலை குறையும், அதிகரிக்கும் பொருட்கள்

வணிகம்6 நாட்கள் ago

தினமும் 14 மணிநேர வேலைக்கு அனுமதி கேட்கும் ஐடி நிறுவனங்கள்.. கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் ஊழியர்கள்!

வணிகம்4 நாட்கள் ago

பட்ஜெட் 2024: உங்கள் குழந்தையின் எதிர்காலத்திற்காக முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளீர்களா? புதிய திட்டம் – என்.பி.எஸ். வாத்ஸல்யா

வேலைவாய்ப்பு6 நாட்கள் ago

அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!