இந்தியா

ஒரே நாளில் 25ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா: முழு ஊரடங்கு உத்தரவிட்ட டெல்லி அரசு!

Published

on

டெல்லியில் நேற்று ஒரே நாளில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட நிலையில் அதிரடியாக அம்மாநிலத்தில் முழு ஊரடங்கு உத்தரவை முதல்வர் அரவிந்த் கேஜரிவால் பிறப்பித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வந்தாலும் தலைநகர் டெல்லியில் நேற்று ஒரே நாளில் 25 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனை அடுத்து அதிரடி முடிவு எடுத்த முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று முதல் ஏப்ரல் 26-ஆம் தேதி வரை முழு ஊரடங்கு என அறிவித்துள்ளார்.

இதனை அடுத்து அம்மாநிலத்தில் முழு ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த முழு ஊரடங்கு உத்தரவை பொதுமக்கள் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்றும் அனைத்து கடைகளும் மூடப்பட்டு இருக்க வேண்டும் என்றும் ஊரடங்கு உத்தரவை மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று டெல்லி அரசு அறிவித்துள்ளது.

இன்னும் சற்று நேரத்தில் பிரதமர் மோடி சுகாதாரத்துறை அமைச்சர் மற்றும் மூத்த அதிகாரிகளுடன் கொரோனாவை கட்டுப்படுத்துவது குறித்த ஆலோசனையில் ஈடுபட்ட உள்ள நிலையில் டெல்லி அரசு இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version