கிரிக்கெட்

பிரபல கிரிக்கெட் மைதானத்திற்கு மறைந்த அமைச்சர் அருண் ஜெட்லியின் பெயர்: கிரிக்கெட் சங்கம் அறிவிப்பு!

Published

on

முன்னாள் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி உடல் நலக்குறைவு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார். இவரது உடல் முழு அரசு மரியாதையுடன் நேற்று தகனம் செய்யப்பட்டது.

இவர் கிரிக்கெட் மீது தனி ஆர்வம் கொண்டவர். இவர் 1999-ஆம் ஆண்டு முதல் 2013-ஆம் ஆண்டு வரை டெல்லி கிரிக்கெட் சங்க தலைவராக இருந்தார். இவரது ஊக்கத்தால் சேவாக், காம்பீர், நெஹ்ரா, பண்ட் உள்ளிட்ட வீரர்கள் டெல்லியில் இருந்து இந்திய அணிக்காக விளையாடி உள்ளார்கள்.

இந்நிலையில் மறைந்த அருண் ஜெட்லியை கவுரவிக்கும் விதமாக டெல்லி கிரிக்கெட் சங்கம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், அருண் ஜெட்லி டெல்லி கிரிக்கெட்டுக்காக ஆற்றிய பணியை கவுரவிக்கும் வகையில் ஃபெரோஸ் ஷா கோட்லா மைதானத்தின் அரங்கிற்கு அருண் ஜெட்லியின் பெயரை வைக்க முடிவு செய்துள்ளனர்.

வரும் செப்டம்பர் மாதம் 12-ஆம் தேதி நடைபெற உள்ள விழாவில் இதனை செய்ய உள்ளனர். இந்த கிரிக்கெட் மைதானம் ஃபெரோஸ் ஷா கோட்லா என்ற பெயரிலேயே நீடிக்கும், அரங்கத்தின் பெயர் மட்டுமே அருண் ஜெட்லி கிரிக்கெட் அரங்கம் என மாற்றப்படுகிறது.

seithichurul

Trending

Exit mobile version