இந்தியா

முதல்வர் சம்பளம் 136%, எம்எல்ஏ சம்பளம் 67% அதிகரிப்பு!

Published

on

டெல்லி முதல்வர் சம்பளம் 12 வருடங்களுக்கு பிறகு அதிகரிக்கப்பட்டுள்ளது.

2023-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் டெல்லி முதல்வர் சம்பளம், சபாநாயகர், எதிர்க்கட்சி தலைவர் சம்பளம் மாதத்திற்கு 1 லட்சத்து 70 ஆயிரம் ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இது 72 ஆயிரம் ரூபாயாக இருந்தது.

அதே போன்று டெல்லி சட்டமன்ற உறுப்பினர்கள் சம்பளமும் 67 சதவிகிதம் அதிகரிக்கப்பட்டு மாதத்திற்கு 90,000 ரூபாயாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இது 54,000 ரூபாயாக இருந்தது.

மேலும் டெல்லி சட்டமன்ற உறுப்பினர்களுக்கு லேடாப், மொபைல் போன் போன்றவற்றுக்காக ஆண்டுக்கு 1 லட்சம் ரூபாயும் ஒரே தவணையாக வழங்கப்படுகிறது.

author avatar
seithichurul

Trending

Exit mobile version