இந்தியா

முதல்வர் மகளிடமே ஆன்லைனில் மோசடி: இழந்த தொகை எவ்வளவு தெரியுமா?

Published

on

முதலமைச்சரின் மகளிடமே ஆயிரக்கணக்கில் ஆன்லைனில் மோசடி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் மகள் ஹர்ஷிதா. இவர் தனது வீட்டில் உள்ள பழைய சோபா ஒன்றை OLXஇல் விற்பனை செய்ய முயற்சி செய்தார். இதனை அடுத்து அவரை தொடர்பு கொண்ட ஒரு நபர் கியூஆர் கோடு ஒன்றை அனுப்பி அந்த லிங்கை ஸ்கேன் செய்யுங்கள், உங்கள் சோபாவுக்கு உரிய பணம் தருகிறேன் என்று கூறியுள்ளார்.

இதனை நம்பிய அரவிந்த் கெஜ்ரிவாலின் மகள் ஹர்ஷிதா உடனடியாக அந்த கியூஆர் கோடை ஸ்கேன் செய்து அனுப்பி உள்ளார். இதன் மூலம் ஹர்ஷிதாவின் மொபைலை ஹேக் செய்த அந்த மர்ம நபர்கள் அவருடைய வங்கிக் கணக்கில் இருந்த ரூபாய் 34 ஆயிரம் பணத்தை உடனே எடுத்து விட்டதாக தெரிகிறது.

இது குறித்து காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தீவிரமாக விசாரணை செய்து கொண்டிருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அவர்களின் மகள் ஹர்ஷிதாவிடமே ரூபாய் 34,000 ஆன்லைன் மூலம் மோசடி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் அந்த மர்ம நபரை விரைவில் பிடிக்க போலீசார் தீவிர முயற்சியில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

Trending

Exit mobile version