இந்தியா

பள்ளிகளை மூட அதிரடி உத்தரவு: பேருந்து, மெட்ரோ ரயில்களுக்கும் கட்டுப்பாடு!

Published

on

ஒமிக்ரான் வைரஸ் பரவல் காரணமாக மீண்டும் பள்ளிகளை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்பதும், அதேபோல் பேருந்துகள் மற்றும் மெட்ரோ ரயிலுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இவை அனைத்தும் டெல்லியில் நடந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் நாளுக்கு நாள் ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது என்பதும் இதனை அடுத்து மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், உத்தரபிரதேசம், டெல்லி, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட ஒருசில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் தலைநகர் டெல்லியில் ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு மின்னல் வேகத்தில் உயர்ந்து வருவதை அடுத்து டெல்லியில் உள்ள அனைத்து பள்ளிகளையும் மூட அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மேலும் பேருந்துகள், மெட்ரோ ரயில்களில் 50 சதவீத பயணிகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என்றும் உடற்பயிற்சிக் கூடங்கள், யோகா மையங்களை மூடவும், அனைத்து விதமான கொண்டாட்டங்களுக்கும் தடை என்றும் முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த உத்தரவு காரணமாக பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 

seithichurul

Trending

Exit mobile version