கிரிக்கெட்

பிரித்விஷா அதிரடி ஆட்டம்: 7 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி வெற்றி!

Published

on

நேற்று நடைபெற்ற ஐபிஎல் தொடரின் 2-வது ஆட்டத்தில் டெல்லி மற்றும் கொல்கத்தா அணிகள் மோதிய நிலையில் டெல்லி அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது.

நேற்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 154 ரன்கள் எடுத்தது. இதனை அடுத்து 155 என்ற எளிய இலக்கை நோக்கி விளையாடத் தொடங்கிய டெல்லி அணியின் தொடக்க ஆட்டக்காரர் பற்றி பிரித்விஷா அதிரடியாக விளையாடினார். முதல் ஓவரிலேயே அவர் 6 பவுண்டரிகளை அடித்து கொல்கத்தா அணிக்கு அதிர்ச்சி கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பின்னரும் அவருடைய அதிரடி தொடர்ந்து அவர் 11 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்சர்களுடன் 46 பந்துகளில் 82 ரன்கள் எடுத்து தனது அணியின் வெற்றிக்கு உதவினார்.

பிரித்விஷா உடன் களமிறங்கிய ஷிகர் தவான் 46 ரன்கள் எடுத்தார். இதனையடுத்து டெல்லி அணி 16.3 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 156 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் டெல்லி அணி பெங்களூரை பின்னுக்கு தள்ளிவிட்டு இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது பிரித்விஷா ஆட்டநாயகனாக தெரிவு செய்யப்பட்டார்.

ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் பஞ்சாப் மற்றும் பெங்களூர் அணிகள் மோதவுள்ளன. இன்றைய போட்டியில் பெங்களூர் அணி வெற்றி பெற்றால் சிஎஸ்கே மற்றும் டெல்லி அணியை பின்னுக்கு தள்ளிவிட்டு முதலிடத்தை பிடித்து விடும் என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version