இந்தியா

விபத்தில் பலியான அஞ்சலி குடுமத்தினரை சந்தித்த நிர்பயா தாயார்.. என்ன சொன்னார் தெரியுமா?

Published

on

டெல்லியில் கடந்த புத்தாண்டு தினத்தில் விபத்தில் பலியான அஞ்சலி என்ற இளம் பெண்ணின் வீட்டிற்கு நிர்பயாவின் தாயார் சென்று ஆறுதல் கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் நிர்பயா என்ற இளம்பெண் ஓடும் பேருந்தில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு தூக்கி எறியப்பட்டார் என்பதும் அவரை பாலியல் பலாத்காரம் செய்த குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டனர் என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் கடந்த புத்தாண்டு தினத்தில் 20 வயது அஞ்சலி என்ற இளம்பெண் தனது தோழி நிதி உடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது கார் ஒன்று வேகமாக மோதியதில் விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் கிட்டத்தட்ட பனிரெண்டு கிலோமீட்டர் அஞ்சலி காரால் இழுத்து செல்லப்பட்டதாகவும் அவருடைய உடை கிட்டத்தட்ட முழுவதுமாக கிழிந்து இருந்ததாகவும் அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இந்த சம்பவத்தில் காரில் சென்ற 5 இளைஞர்கள் கைது செய்யப்பட்டு அவர்களிடம் விசாரணை நடந்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில் அஞ்சலியுடன் சென்ற நிதி என்ற இளம்பெண் சமீபத்தில் அளித்த பேட்டியில் அஞ்சலி மது போதையில் இருந்ததாகவும் அவரை வண்டி ஓட்ட வேண்டாம் என்று கூறியும் கேட்கவில்லை என்றும் மது குடித்துவிட்டு வண்டி ஓட்டுவது தவறு என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் அஞ்சலியின் குடும்பத்தினரை நிர்பயாவின் தாயார் நேரில் சந்தித்து ஆறுதல் கூறி உள்ளார். அந்த குடும்பத்தில் வருமானம் பார்க்கும் ஒரே நபர் அஞ்சலிதான் என்றும் அவரை இழந்து தவிக்கும் குடும்பத்திற்கு அரசு போதிய இழப்பீடு தரவேண்டும் என்றும் அந்த குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை தர வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். மேலும் அந்த குடும்பத்திற்கு நிதியுதவி தர அதிகாரிகளை அவர் வலியுறுத்தியுள்ளார். அதுமட்டுமின்றி அஞ்சலியின் தோழி நிதி கொடுத்த தகவல்களை அவர் ஏற்று கொள்ளவில்லை என்றும் தெரிவித்தார்.

அஞ்சலியின் குடும்பத்தினரை நிர்பயாவின் தாயார் நேரில் சந்தித்த சம்பவம் டெல்லியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. முன்னதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா ஆகியோர்களும் அஞ்சலியின் வீட்டிற்கு சென்று அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் அளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version