இந்தியா

ரபேல் ஒப்பந்தம் எப்படி செய்யப்பட்டது? நிர்மலா சீதாராமன் அதிரடி விளக்கம்

Published

on

டெல்லி: ரபேல் ஒப்பந்தம் பற்றி எதிர்க்கட்சிகளின் புகாருக்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் லோக் சபாவில் விளக்கம் அளித்துள்ளார்.

நேற்று முதல்நாள் ரபேல் ஒப்பந்தம் குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நாடாளுமன்றத்தில் பேசினார். பாஜக மீதும், பிரதமர் மோடி, நிதி அமைச்சர் அருண் ஜேட்லி, பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோர் மீது கடுமையான ஊழல் குற்றச்சாட்டுகளை வைத்தார். இது பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.

இதற்கு அவையிலேயே நிதி அமைச்சர் அருண் ஜேட்லி பதில் அளித்தார். இந்த நிலையில் ரபேல் ஒப்பந்தம் செய்யப்பட்டது எப்படி என்று பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தற்போது விளக்கம் அளித்துள்ளார்.

நாட்டின் பாதுகாப்பிற்காகவே ரபேல் விமானம் வாங்கப்பட்டது.இந்தியாவில் ராணுவ விமானங்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. சீனா 400 புதிய விமானங்களை வாங்கி உள்ளது. பாகிஸ்தான் தனது பாதுகாப்பு பலத்தை இரட்டிப்பாக்கி உள்ளது. அண்டை நாடுகளின் ராணுவ பலம் அதிகம் ஆகியுள்ளது. அவசரத்திற்காகவே விமானம் வாங்க முடிவெடுத்தோம்.

போர் தேவைகளுக்காக விமானம் அவசரமாக தேவைப்பட்டது.நாட்டின் பாதுகாப்பை காங்கிரஸ் அரசு கருத்தில் கொள்ளவில்லை. 2001ல் வாஜ்பாயாய் அரசுதான் போர் விமானம் வாங்க கொள்கை அளவில் ஒப்பந்தம் அளித்தது.

seithichurul

Trending

Exit mobile version