இந்தியா

காங்கிரஸ் அதிருப்தி தலைவர்கள் இன்று அவசர ஆலோசனை: சோனியா, ராகுலை நீக்க முடிவா?

Published

on

காங்கிரஸ் செயற்குழு கூட்டம் சமீபத்தில் கூடிய நிலையில் காங்கிரஸ் அதிருப்தி தலைவர்களின் அவசர ஆலோசனை இன்று டெல்லியில் நடைபெற இருப்பதாக வெளிவந்திருக்கும் செய்தி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சமீபத்தில் நடந்த 5 மாநில தேர்தல் தோல்வி குறித்து ஆலோசனை செய்ய காங்கிரஸ் செயற்குழு கூட்டம் சமீபத்தில் கூடியது. இந்த கூட்டத்தில் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்பட பல தலைவர்கள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் தங்கள் பதவி பொறுப்பை ராஜினாமா செய்ய முன்வந்த போதிலும் அதனை காங்கிரஸ் தலைவர்கள் ஏற்கவில்லை என்றும் சோனியாவே காங்கிரஸ் தலைவர் பொறுப்பில் நீடிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டது.

இந்த நிலையில் காங்கிரஸ் அதிருப்தி தலைவர்கள் இன்று டெல்லியில் அவசர ஆலோசனை செய்ய இருப்பதாக கூறப்படுகிறது. இந்த ஆலோசனையில் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகிய இருவரையும் கட்சியின் நிர்வாக பொறுப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று முடிவெடுத்திருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

காங்கிரஸ்கட்சிக்கு இளம் ரத்தம் கொண்ட ஒருவர் தலைவராக வேண்டும் என்றும் கட்சியை முழுக்க முழுக்க இளைஞர்கள் கையில் கொடுத்து புத்துணர்ச்சியை ஏற்படுத்த வேண்டும் என்றும் மூத்த தலைவர்கள் தெரிவித்து வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 

Trending

Exit mobile version