உலகம்

சரியாக கோல் போட்டு துள்ளிக் குதிக்கும் மான்… 13 ஆயிரம் லைக்ஸ் குவித்த வீடியோ…

Published

on

விலங்குகளுக்கு 5 அறிவுதான் என நாம் நினைக்கிறோம். ஆனால், அவை எவ்வளவு புத்திக் கூர்மையானவை என்பது பலருக்கும் தெரியாது. சில சமயம் விலங்குகள் மனிதர்கள் போலவே செயல்படும். மனிதர்களை போலவே யோசிக்கும். மனிதர்களுக்கு கீழ் படியும் சில விலங்குகள் சில சமயம் மனிதர்களை விட சிறப்பாக யோசிக்கும். இதில் யானை முக்கியமான விலங்காகும். யானைகள் பல சமயங்களில் புத்தி கூர்மையுடன் செயல்படுவதை நாம் பார்க்க முடியும்.

இந்நிலையில், மான் ஒன்று மனிதர்களை போலவே விளையாடும் வீடியோ ஒன்று வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. கால் பந்தாட்டத்தில் மனிதர்கள் கோல் போடுவது போலவே ஒரு மான் கோல் போட்டதோடு மட்டுமில்லாமல், சந்தோஷத்தில் அது துள்ளிக் குதித்து மகிழ்ச்சியையும் கொண்டாடும் அந்த வீடியோவை இதுவரை 13 ஆயிரத்து 800 பேர் லைக் செய்துள்ளனர். 2191 பேர் ரீடிவிட் செய்துள்ளனர்.

இந்த வீடியோ பார்த்த நெட்டிசன்கள் இது சிறப்பான கோல் என பதிவிட்டு வருகின்றனர்.

seithichurul

Trending

Exit mobile version