பிற விளையாட்டுகள்

டோக்கியோ ஒலிம்பிக்ஸ்: காலிறுதிக்கு தகுதி பெற்றார் தீபிகா குமாரி!

Published

on

ஜப்பானில் தற்போது நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியில் இந்திய வீராங்கனைகள் ஒரு சிலர் பதக்கத்தை நோக்கி சென்று கொண்டிருக்கின்றனர் என்பதை ஏற்கனவே பார்த்தோம். குறிப்பாக பேட்மிட்டன் போட்டியில் பிவி சிந்து, வில்வித்தையில் தீபிகா குமாரி மற்றும் குத்துச்சண்டையில் பூஜா ராணி ஆகியோர் பதக்கத்தை நோக்கி சென்று கொண்டு இருந்தனர் என்பதை பார்த்தோம்.

இந்த நிலையில் சமீபத்தில் இந்தியாவின் தீபிகா குமாரி வில்வித்தை போட்டியில் மிக அபாரமாக விளையாடி 2-வது சுற்றில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முந்தைய சுற்றில் தகுதி பெற்றிருந்தார்.

இந்த நிலையில் இன்று அடுத்த சுற்றில் இந்தியாவின் தீபிகா குமாரி ரஷ்யாவின் பூடானின் செனியா பெரொவா என்பவரை எதிர்கொண்டார் இந்த போட்டியில் தீபிகா குமாரி முதல் செட்டை 28 – 25 என கைப்பற்றிய நிலையில் 2-வது செட்டை ரஷ்ய வீராங்கனை வென்றார். மூன்றாவது செட்டை தீபிகா 28 – 27 என்ற கைப்பற்றிய நிலையில் நான்காவது செட்டை இருவரும் சமன் செய்தனர். இதனையடுத்து ஐந்தாவது தீபிகா இழந்ததால் வெற்றியாளரை நிர்ணயிக்கும் ஷூட் ஆப் பாயிண்ட் முறை கடைப்பிடிக்கப்பட்டது.

ஷூட் ஆப் பாயிண்ட் முறை சுற்றில், தீபிகா குமாரி 10 புள்ளிகளும், ரஷ்ய வீராங்கனை பூடானின் செனியா பெரொவா 7 புள்ளிகளும் பெற்றதையடுத்து தீபிகா குமாரி காலிறுதிக்கு தகுதி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

இதனை அடுத்து இந்தியாவின் தீபிகா குமாரிக்கு கிட்டதட்ட பதக்கம் உறுதி என்ற நிலை ஏற்பட்டுள்ளதால் அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

seithichurul

Trending

Exit mobile version