தமிழ்நாடு

தீபாவளி சிறப்புப் பேருந்துகள்.. எங்கிருந்து கிடைக்கும்? எங்குச் செல்லும்?

Published

on

தீபாவளி சிறப்புப் பேருந்துகள் குறித்து முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட விழாக்காலங்களில் சென்னையில் இருந்து வெளியூர்களுக்குச் செல்ல சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம்.

அப்படி வர இருக்கும் தீபாவளியின் போது கோயம்பேடு பேருந்து நிலயத்திற்கு வரும் நெரிசிலை தவிர்க கூடுதலாக 5 இடங்களில் இருந்து வெளியூர்களுக்குப் பேருந்துகளைத் தமிழகப் போக்குவரத்துத் துறை இயக்க முடிவு செய்துள்ளது.

மாதவராம் புதிய பேருந்து நிலையம் – ஆந்திரா மார்க்கமாகச் செல்லும் பேருந்துகள்

கே.கே. நகர் பேருந்து நிலையம் – ஈசிஆர் மார்க்கமாகப் புதுச்சேரி, கடலூர், சிதம்பரம் செல்லும் பேருந்துகள்

தாம்பர அறிஞர் அண்ணா பேருந்து நிலையம் – விக்கிரவாண்டி, பண்ருட்டி வழியாகக் கும்பகோணம், தஞ்சாவூர் செல்லும் பேருந்துகள்

தாம்பரம் ரயில் நிலைய பேருந்து நிலையம் – திருவண்ணாமலை செல்லும் பேருந்துகள்

பூந்தமல்லி பேருந்து நிலையம் – காஞ்சிவரம், செய்யார், வேலூர், ஆரணி, ஆற்காடு, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி மற்றும் ஓசூர் செல்லும் பேருந்துகள்

கோயம்பேடு பேருந்து நிலையம் – மேலே குறிப்பிட்டுள்ள ஊர்களைத் தவிரப் பிற ஊர்களுக்குச் செல்லும் பேருந்துகள்.

seithichurul

Trending

Exit mobile version