தமிழ்நாடு

மேல்முறையீடு செய்தாலும் எங்களுக்குத்தான் ‘வேதா இல்லம்’: தீபா பேட்டி

Published

on

மேல்முறையீடு செய்தாலும் எங்களுக்குத்தான் சட்டப்படி வெற்றி கிடைக்கும் என்றும் வேதா இல்லம் எங்களுக்குதான் என்றும் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா அவர்கள் பேட்டி அளித்துள்ளார்.

ஜெயலலிதா வாழ்ந்த ‘வேதா இல்லம்’ அரசுடமையாக்கப்பட்டது செல்லாது என்றும் ‘வேதா இல்லத்ஹ்டை உடனடியாக தீபா மற்றும் தீபக் ஆகியோரிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் சென்னை ஐகோர்ட் தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பை எதிர்த்து அதிமுக தரப்பிலிருந்து மேல்முறையீடு செய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

பல நூறு கோடி ரூபாய் மதிப்பிலான வேதா இல்லத்தை அதிமுக அரசு அரசுடைமை ஆக்கியது தவறு என்றும் அரசின் இந்த நடவடிக்கையை எதிர்த்து ஜெயலலிதாவின் அண்ணன் வாரிசுகளான தீபா மற்றும் தீபா தொடர்ந்த வழக்கு வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் வேதா இல்லத்தை அரசுடைமை ஆக்கியது செல்லாது என்ற தீர்ப்பை எதிர்த்து அதிமுக தரப்பிலிருந்து மேல்முறையீடு செய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

இது குறித்து ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா கூறுகையில் ’இந்த வழக்கில் நீதிமன்றம் அளித்த தீர்ப்பு நியாயமான, சட்டப்படியான, தர்மத்தின்படியான தீர்ப்பு என்றும், இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்தாலும் எங்களுக்கு தான் வெற்றி கிடைக்கும், அதிமுக ஒருவேளை மேல்முறையீடு செய்தாலும் சட்டப்படி எதிர்கொள்வோம் என்றும் ‘வேதா இல்லம்’ எங்களுக்கு தான் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Trending

Exit mobile version