செய்திகள்

ஜெ.வின் போயஸ் கார்டன் வீட்டில் தீபா மற்றும் தீபக் – பரபரப்பு பேட்டி

Published

on

முன்னாள் முதல் ஜெயலலிதாவின் மறைவுக்கு பின் அவர் வசித்து வந்த வேதா இல்லத்தை அவரின் நினைவிடமாக மாற்றுவதாக அதிமுக அரசு சட்டம் இயற்றியது. ஆனால், இதை எதித்து ஜெ.வின் அண்ணன் மகள் தீபா மற்றும் மகன் தீபக் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கில் தனி நபர் சொத்துக்களை அரசுடமை ஆக்குவதற்கு அரசுக்கு அதிகாரம் இல்லை என்றும் வேதா இல்லத்தை அரசுடமையாக்கிய சட்டத்தை செல்லாது என அறிவிக்க வேண்டும் என்றும் அவர்கள் குறிப்பிட்டிருந்தனர்.

இந்த வழக்கு தொடர்பான தீர்ப்பில் வேதா நிலையம் மற்றும் மெரினாவில் உள்ள பீனிக்ஸ் நினைவிடம் என இரண்டு நினைவிடங்கள் எதற்கு என கேள்வி எழுப்பிய நீதிமன்றம், ஜெயலலிதா வாழ்ந்த இல்லத்தை அரசுடமை ஆக்கி பிறப்பித்த சட்டம் செல்லாது என அறிவித்ததோடு, மூன்று வாரங்களில் வாரிசுதாரர்களிடம் வேதா இல்லத்தை ஒப்படைக்க வேண்டும் என தீர்ப்பளித்தனர்.

deepa

எனவே, போயஸ் கார்டன் வீட்டு சாவியை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என சென்னை மாவட்ட ஆட்சியரிடம் தீபாவும், தீபக்கும் கோரிக்க வைத்தனர். அதன்படி இன்று அவர்களிடம் சாவி ஒப்படைக்கப்பட்டது.எனவே, அவர்கள் இருவரும் அந்த வீட்டிற்கு சென்று தங்களின் அத்தை வாழ்ந்த வீட்டை சுற்றி பார்த்தனர். ஜெயலலிதா இல்லாமல் இப்போதுதான் முதல் முறையாக இந்த வீட்டிற்கு வந்துள்ளதாக அவர்கள் கூறியுள்ளனர்.

deepa

மேலும், நீதிமன்ற தீர்ப்பு எதிர்த்து அதிமுக மேல் முறையீடு செய்தால் அதை சட்டப்படி சந்திப்போம் என அவர்கள் கூறியுனர்.

இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

deepa

Trending

Exit mobile version