தமிழ்நாடு

முல்லைப் பெரியாறு: அணையின் நீர்மட்டத்தை குறைக்க வேண்டும்.. குழு பரிந்துரை

Published

on

டெல்லி: முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டத்தை 139 அடியாக குறைக்க வேண்டும் என்று துணை கண்காணிப்பு குழு தமிழக அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.

கேரளாவில் வெள்ளம் காரணமாக முல்லைப் பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. தற்போது உச்சநீதிமன்றம் அனுமதித்துள்ள அளவான 142 அடியில் முல்லைப் பெரியாறு அணை உள்ளது.

முல்லைப் பெரியாறு

நீர்மட்ட அளவை 139 அடியாக குறைக்குமாறு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இதில் அணையின் துணை கண்காணிப்பு குழுவின் பரிந்துரையை தமிழக அரசு ஏற்கவேண்டும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இந்த நிலையில் தற்போது துணை கண்காணிப்பு குழுவின் பரிந்துரையை வெளியாகி உள்ளது. அதன்படி முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டத்தை 139 அடியாக குறைக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version