இந்தியா

பாபாவுக்கு கொரோனா அலங்காரம்: 3வது அலை உருவாகாமல் இருக்க பிரார்த்தனை!

Published

on

இந்தியாவில் தற்போது கொரோனா வைரஸ் இரண்டாவது அலை வீசி வரும் நிலையில் மூன்றாவது அலை உருவாகாமல் இருக்க பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அவற்றில் ஒன்றாக தற்போது சாய்பாபாவுக்கு கொரோனா அலங்காரம் செய்யப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பெங்களூர் ஜேபி நகரில் உள்ள சாய்பாபா கோவிலுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து வழிபடுவார்கள் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இந்தியாவில் மூன்றாவது அலை உருவாகாமல் இருக்கவும் இரண்டாவது அலை கூடிய விரைவில் முடிவுக்கு வரவும் பிரார்த்தனை செய்து இங்கு உள்ள சாய்பாபாவுக்கு பூஜைகள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில் சாய்பாபாவுக்கு 3 லட்சம் மாத்திரைகள், 10 ஆயிரம் முகக்கவசங்கள், இரண்டாயிரம் சானிடைசர் பாட்டில்கள் மற்றும் உணவு தானியங்கள், பழங்கள் மற்றும் உணவுப் பொருட்களை கொண்டு வித்தியாசமான முறையில் அலங்காரம் செய்யப்பட்டு உள்ளது. இதற்கான சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு இந்தியாவில் மூன்றாவது அலை வரக்கூடாது என வேண்டி வழிபட்டனர். இதுகுறித்து கோவில் நிர்வாகி ஒருவர் கூறியபோது கடந்த சில தினங்களாக சாய்பாபாவுக்கு இம்மாதிரியான விசேஷ அலங்காரங்கள் செய்யப்பட்டு வருவதாகவும், கொரோனா வைரஸிலிருந்து மக்களை பாதுகாக்கவும் மூன்றாவது அலை உருவாகாமல் இருக்கவும் வேண்டி இந்த சிறப்பு அலங்காரமும் பூஜையும் நடத்தப்பட்டு வருவதாகவும் கூறினார்.

இந்த சிறப்பு பூஜையில் தேஜஸ்வி சூர்யா எம்பி உள்பட பலர் கலந்து கொண்டு தரிசனம் செய்ததாகவும், சாய்பாபாவின் அருளால் இந்தியாவில் மூன்றாவது அலை உருவாகாமல் தடுக்கும் என்று அனைவரும் நம்புவதாகவும் அவர் தெரிவித்தார்.

author avatar
seithichurul

Trending

Exit mobile version