இந்தியா

மத்திய அரசு ஊழியர்களுக்கு இனி 31% அகவிலைப்படி: அதிரடி அறிவிப்பு

Published

on

மத்திய அரசு ஊழியர்களுக்கு இதுவரை 28 சதவீதமாக அகவிலைப்படி இருந்த நிலையில் தற்போது 3 சதவீதம் உயர்த்தப்பட்டு 31 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் மத்திய அரசு ஊழியர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தும் அறிவிப்பு மிக விரைவில் வெளியாகும் என ஏற்கனவே செய்திகள் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது. அதன்படி மத்திய அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து தற்போது 31% ஆக அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தீபாவளி நெருங்கி உள்ள நேரத்தில் வெளிவந்துள்ள இந்த அறிவிப்பு காரணமாக மத்திய அரசு ஊழியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த அகவிலைப்படி உயர்வு கடந்த ஜூலை மாதம் 1-ஆம் தேதி முதல் கணக்கிட்டு மொத்தமாக வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

கடந்த 2020 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 28 சதவீதமாக அகவிலைப்படி உயர்த்தப்பட்ட நிலையில் இந்த ஆண்டு கூடுதலாக ஐந்து சதவீதம் வரை உயர்த்த வேண்டும் என மத்திய அரசு ஊழியர்கள் கோரிக்கை விடுத்தனர். ஆனால் 3 சதவீதம் அகவிலைப்படி உயர்த்துவதற்கு மத்திய அமைச்சரவை பரிந்துரை செய்ததை அடுத்து பிரதமர் மோடி இதற்கான ஒப்புதலை வழங்கினார்.

இதனை அடுத்து மத்திய அரசு ஊழியர்களுக்கு இனி 31 சதவீதம் அகவிலைப்படி வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த உயர்வு காரணமாக 47 லட்சத்து 14 ஆயிரம் ஊழியர்கள் வளம் பெறுவார்கள் என்றும் மத்திய அரசு 9 ஆயிரத்து 488 கோடி கூடுதல் செலவு ஏற்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு ஊழியர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள இந்த அகவிலைப்படி தீபாவளி போனஸாக அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version