வணிகம்

மத்திய அரசு ஊழியர்களுக்குத் தீபாவளி பரிசு; அகவிலைப்படி அதிகரிப்பு!

Published

on

மத்திய அரசு ஊழியர்களுக்குத் தீபாவளிக்கு முன்பாக அகவிலைப்படி 5 சதவீதம் முதல் 17 சதவீதம் வரை உயர்த்துவதாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் புதன்கிழமை அறிவித்துள்ளார்.

இதனால் மத்திய அரசின் கீழ் வரும் 50 லட்சத்திற்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் மற்றும் 62 லட்சத்திற்கும் அதிகமான ஓய்வூதியர்கள் தீபாவளி போனஸின் போது அதிக பயன்பெறுவார்கள்.

இதனால் மத்திய அரசுக்கு 16 ஆயிரம் ரூபாய் வரை கூடுதல் செலவாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பணவீக்கம் அதிகரிக்கும் போது ஏற்படும் விலைவாசி அதிகரிப்பை சமாளிக்க அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் படியே அகவிலைப்படியாகும்.

seithichurul

Trending

Exit mobile version