சினிமா செய்திகள்

டியர் காம்ரேட் டிரைலர் ரிலீஸ்!

Published

on

கீதா கோவிந்தம் படத்திற்கு பிறகு விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா இணைந்து நடித்திருக்கும் டியர் காம்ரேட் படத்தின் டிரைலர் வெளியாகி வைரலாகி வருகிறது.
தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் டியர் காம்ரேட் படம் உருவாகி உள்ளது.

பரத் கம்மா இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில், காதல், கிரிக்கெட் மற்றும் அரசியல் என பல விதமான ஜானர்கள் படம் முழுக்க பயணம் செய்து வருகிறது.

அர்ஜுன் ரெட்டி படத்திற்கு பிறகு இறங்கி நடித்திருக்கிறார் விஜய் தேவரகொண்டா என்றே சொல்ல வேண்டும். டிரைலரில் வரும் ஒவ்வொரு ஃபிரேமிலும் அவர் காட்டும் வேரியேஷன்ஸ் அப்ளாஸ் அள்ளுகிறது.

க்யூட் நாயகி ராஷ்மிகா மந்தனா கூடுதல் க்யூட்டுடன் இந்த படத்தில் நடித்துள்ளார். மேலும், கிரிக்கெட்டராக அவர் நடித்திருப்பதால், லூசு ஹீரோயின் என்பதை தாண்டி யூஸ்ஃபுல் ஹீரோயினாக படத்திற்கு பலம் சேர்ப்பார் என எதிர்பாக்கப்படுகிறது.

படத்தின் தெலுங்கு டிரைலர் தற்போது வெளியாகி உள்ளது. தமிழ் டிரைலர் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

author avatar
seithichurul

Trending

Exit mobile version