சினிமா செய்திகள்

36 வயது சிங்கிள், டைவோர்ஸி, குழந்தையில்லை: டிடியின் வித்தியாசமான மகளிர் தின வீடியோ!

Published

on

விஜய் டிவி தொகுப்பாளினியும், சினிமா நடிகையுமான டிடி என்கிற திவ்யதர்ஷினி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குட்டி ஸ்டோரி டைப்பில் ஒரு வித்தியாசமான மகளிர் தின வாழ்த்துக்களை பதிவு செய்துள்ளர.

வீடியோ வடிவில் அவர் பதிவு செய்துள்ள போஸ்ட்டில், மாஸ்டர் படத்தில் இடம்பெற்ற குட்டி ஸ்டோரி பாடல் பாடல் பின்னணியில் ஒலிக்க, அவர் தான் கடந்து வந்த பாதையை காட்சிப்படுத்தியுள்ளார்.

தனக்கு 36 வயது ஆகிறது என்றும், தான் ஒரு சிங்கிள் என்றும், விவாகரத்து ஆனவர் என்றும், இதுவரை குழந்தை இல்லை என்றும், ஆனாலும் மகிழ்ச்சியாக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஒவ்வொருவரது வாழ்க்கையும் ஒவ்வொரு வகையில் வித்தியாசமானது என்றும் நீங்கள் உங்கள் வாழ்க்கையை வாழ வேண்டும் என்றும் உங்களை தோல்வி ஆனவர் என்று யாராவது தீர்மானித்தால் அதை அனுமதிக்க வேண்டாம் என்றும் கூறியுள்ளார்.

குட்டி ஸ்டோரி பின்னணியில் வித்தியாசமான மகளிர் தின வாழ்த்துக்களை கூறியுள்ள டிடிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. டிடியின் இந்த பதிவிற்கு திரையுலக பிரபலங்கள் உள்பட பலர் லைக் செய்தும் கமெண்ட் செய்தும் வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version