கட்டுரைகள்

ஒரு பக்கம் பெரு வெள்ளம்.. இன்னொரு பக்கம் மோசமான வறட்சி.. சென்னையின் நிலைக்கு என்ன காரணம்?

Published

on

சென்னை: பருவநிலை மாறுபாடு காரணமாக உலகின் பல நகரங்களிலும் கடும் வறட்சியும், அதிகப்படியான வெள்ளமும் ஏற்படுகிறது. ஆனால் சென்னையில் இருக்க கூடிய 11 மில்லியன் மக்களுக்கு மட்டும் இரண்டும் மாறி மாறி ஏற்படுகிறது.

இந்தியாவின் ஆறாவது பெரிய நகரம் ஆண்டுக்கு சராசரியாக 1400 மிமீ மழை பொழிவை பெறுகிறது. இது லண்டனை விட இரண்டு மடங்கு அதிகம், மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸை விட நான்கு மடங்கு அதிகம். அதேநேரம் சிலநேரம் அதிகமாக மழை பெய்யும் என கூறப்படும் பெங்களூரின் அதிகபட்ச மழை அளவு சென்னையின் சராசரி அளவாக பதிவாகும். இருப்பினும் கடந்த 2019 ஆம் ஆண்டு உலகின் முக்கியமான நகரங்களில் ஒன்று தண்ணீர் பற்றாக்குறையால் மோசமாக பாதிக்கப்பட்ட செய்தி அணைத்து பகுதிகளிலும் தலைப்பு செய்தியை ஆட்கொண்டது. இப்பொது இந்தாண்டு வரலாறு காணாத ஜனவரி மாத மழை பொழிவையும் சென்னை கண்டுள்ளது.

தொழில்மயமாக்கல், நகரமயமாக்கல் மற்றும் தீவிர வானிலை ஆகியவை ஒன்றிணைந்து புதிய வீடுகள், தொழிற்சாலைகள் மற்றும் அலுவலகங்களுக்கான தேவையை பூர்த்தி செய்ய வளர்ந்து வரும் பெருநகரங்கள் உருவாகும்போது என்ன தவறு ஏற்படக்கூடும் என்பதில் சென்னை ஒரு ஆய்வு கட்டுரையாக மாறியுள்ளது. முன்னர் மெட்ராஸ் என அழைக்கப்பட்ட சென்னை மாநகரம் இந்தியாவின் தென்கிழக்கு கடற்கரையில் அமைந்துள்ளது. மூன்று முக்கிய ஆறுகள் சென்னையில் ஓடினாலும் அவை எல்லாமே பெரும்பாலும் மாசடைந்து விட்டது. பல நூற்றாண்டுகளாக இது தூர கிழக்கை இணைக்கும் வர்த்தக இணைப்பாகவும், தென் இந்தியாவின் நுழைவு வாயிலாகவும் உள்ளது.பாரிஸை விட அதிக மக்கள்தொகையை கொண்டுள்ள சென்னையில் அணைத்து வகையான தொழில்களும் இடம்பெற்றுள்ளன. முக்கியமாக ஆட்டோ, ஹெல்த்கேர், ஐடி மற்றும் திரைப்படத் தொழில்களில் உள்ளனர்.

வங்காள விரிகுடாவில் ஏற்படும் புயல்களினால் அவ்வப்போது நகரத்திற்கு நல்ல மழை பொழிவு கிடைக்கிறது. இதனால் கழிவு நீர் நிரம்பிய தண்ணீர் சாலைகளிலும் பெருக்கெடுத்து ஓடுகின்றன. சராசரியாக நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் 90 சதவிகிதம் மழை பெய்யும். ஆனால் மழை பெய்யாமல் போனால் நூற்றுக்கணக்கான கிலோமீட்டருக்கு தொலைவில் உள்ள நீர்நிலைகளை தான் நம்பி இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.ஏனெனில் நகரத்திற்குள் இருக்கும் ஏரிகள், ஆறுகள் பயன்படுத்த முடியாத நிலையில் தான் உள்ளன. காலநிலை மாற்றம் மற்றும் தீவிர வானிலை ஒரு பங்கைக் கொண்டிருந்தாலும், சென்னையின் நீர் துயரங்களுக்கு முக்கிய காரணம் மோசமான திட்டமிடல் தான். நகரம் வளர வளர வெள்ளநீர் தேகத்திற்கான பரந்த பகுதிகள், ஏரிகள், மற்றும் குளங்களும் காணாமல் போய்விட்டன. 1893 மற்றும் 2017 க்கு இடையில், சென்னையின் நீர்நிலைகளின் பரப்பளவு 12.6 சதுர கிலோமீட்டரிலிருந்து சுமார் 3.2 சதுர கிலோமீட்டராக சுருங்கிவிட்டதாக சென்னையின் அண்ணா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். அவற்றில் பெரும்பாலானவை சமீப களங்களில் நிகழ்ந்தவை. 2030 ஆம் ஆண்டிற்குள் 60 சதவிகிதம் சென்னையின் நிலத்தடி நீர் சிதைந்து விடும் என்றும் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

அதிகரிக்கும் வெப்பநிலை:

நீர்வழி தடங்களில் ஆக்கிரமிப்புகள் அதிகமானதால், 2015 ஆம் ஆண்டு சென்னை வரலாறு காணாத வெள்ளத்தை சந்தித்தது. ஒரே நாளில் சுமார் 494 மிமீ பெய்த மழையால் நகரமே தண்ணீரில் தத்தளித்தது. நூற்றுக்கணக்கான பேர் உயிரிழந்தனர். பல ஆயிரம் பேர் வீடுகளை விட்டு காலி செய்தனர். பல இடங்களில் இரண்டாவது தளம் வரைக்கும் வெள்ளம் சென்றது. ஆனால் அடுத்த நான்கு ஆண்டுகளிலேயே நகரம் ஜீரோ டே எனும் மோசமான வறட்சி நிலையை அடைந்தது.ஒட்டுமொத்த நகரத்திற்கும் தண்ணீர் இல்லாமல் பல பகுதிகளில் இருந்தும் நீர் கொண்டுவரப்பட்டது.

சென்னையின் வெள்ளம் மற்றும் வறட்சி இரண்டும் ஒரே வேர்களை கொண்டுள்ளன. ஒரு பகுதியில் நகரமயமாக்கல் மற்றும் கட்டுமானம், அந்த இடத்தின் இயற்கையான வரம்புகளைப் பொருட்படுத்தாமல் நிகழ்த்தப்பட்டுள்ளன என்று சூழியல் ஆர்வலரான நிதியானந்த் ஜெயராமன் தெரிவித்துள்ளார். தமிழகத்தின் தலைநகரான வந்தாரை வாழ வைக்கும் சென்னையில் 2100-க்குள் ஆண்டு வெப்பநிலை 3.1டிகிரி செல்சியல்ஸ் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. அதே நேரம் பருவ மழையும் 9% வரை குறைய வாய்ப்புள்ளதாகவும் கணிக்கப்பட்டுள்ளது.

இன்னும் மோசமான விஷயம் என்னவென்றால், ஜூன்-செப்டம்பர்காலகட்டத்தில் தென்மேற்கு பருவமழையின் போது மழை பெய்யும், இது பொதுவாக பயிர்களை வளர்ப்பதற்கும் நீர்த்தேக்கங்களை நிரப்புவதற்கும் தேவையான நிலையான மழை பொழிவு குறைய ஆரம்பிக்கும். ஆனால் குளிர்காலத்தில் வெள்ள பாதிப்பை கொடுக்கும் புயல் காலம் அதிகரிக்கப்படும்.

உலகமுழுவதிலும் உள்ள பெரு நகரங்களை சீர்குலைக்கும் ஒரு பிரச்சனைக்கு சென்னை ஒரு சிறந்த உதாரணம். தமிழக அரசு பிரச்சினையை நிவர்த்தி செய்வதாகக் கூறுகிறது. 2003 ஆம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட மழைநீர் சேகரிப்பு திட்டம் நீரின் அளவை உயர்த்த பெருமளவில் உதவியது. ஆனால் முறையான பராமரிப்பு இல்லாததால் அதுவும் பின்னர் பயனற்றதாக மாறிவிட்டது. இப்போது தமிழக அரசு நிலத்தடி நீரை மீட்டெடுக்கவும், பழங்கால முறைப்படி தண்ணீரை சேமித்து வைக்கவும் புதிய வழிமுறைகளை கையாள தொடங்கியுள்ளது.

இதற்கிடையில், சென்னை ஆண்டுக்கு கால் மில்லியனுக்கும் அதிகமான மக்களைச் சேர்த்துக் கொண்டிருக்கிறது. இதனால மீண்டும் ஒரு பெரு வெள்ளம் மற்றும் வறட்சியை தடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version