தமிழ்நாடு

தமிழக உளவுத்துறை கூடுதல் டிஜிபி இவரா? தமிழக அரசின் அதிரடி முடிவு

Published

on

தமிழகத்தில் திமுக ஆட்சியை கடந்த சில நாட்களாக நடந்து வரும் நிலையில் அதிரடியாக ஐஏஎஸ் ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர் என்றும் இதுவரை முக்கியத்துவம் இல்லாத துறையில் இருந்த திறமைமிக்க அதிகாரிகளுக்கு முக்கியத்துவமுள்ள துறை கொடுக்கப்பட்டு வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம்.

அந்த வகையில் தற்போது தமிழக உளவுத்துறை கூடுதல் டிஜிபியாக டிஜிபி நியமனம் தற்போது செய்யப்பட்டுள்ளது. தமிழக உளவுத்துறை கூடுதல் டிஜிபியாக டேவிட்சன் தேவாசீர்வாதம் அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழக காவல்துறையில் உளவுத்துறை என்பது மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. திறமை, அனுபவம் உள்ள அதிகாரிகள் மட்டுமே இந்த பதவிக்கு நியமிக்கப்படுவார்கள்.

அந்த வகையில் அனுபவமிக்க டேவிட்சன் தேவாசீர்வாதம் அவர்கள் தற்போது உளவுத் துறை கூடுதல் டிஜிபியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஐபிஎஸ் அதிகாரி டேவிட்சன் தேவாசீர்வாதம் 1995ஆம் ஆண்டு தமிழக காவல் துறையில் பணியில் சேர்ந்து பணியாற்றி வருகிறார். போதை பொருள் தடுப்பு, நுண்ணறிவு பிரிவு, டிஐஜி, உளவுத்துறை ஐஜி, மதுரை, கோவை மாநகர காவல் ஆணையர் என பல முக்கிய பொறுப்புகளில் டேவிட்சன் தேவாசீர்வாதம் பணியாற்றியுள்ளார்.

க்யூ பிரிவில் பணிபுரிந்தபோது மாவோயிஸ்டுகள் ஊடுருவல் தடுப்பு பணியை சிறப்பாக செய்ததாக டேவிட்சன் தேவாசீர்வாதம் பாராட்டை பெற்றார். மேலும் அவர் பல வழக்குகளை சிறப்பாக கையாண்டு என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் உளவுத்துறைக்கு அவர் டிஜிபி ஆம நியமனம் செய்யப்பட்டுள்ளது மிகச்சரியான நடவடிக்கை என கூறப்பட்டு வருகிறது.

author avatar
seithichurul

Trending

Exit mobile version