இந்தியா

தந்தையிடம் ரூ.75 லட்சம் வலுக்கட்டாயமாக வரதட்சணை வாங்கிய மகள்: அதன்பின் நடந்த சுவாரஸ்யம்!

Published

on

தந்தையிடம் அவர் பெற்ற மகளே ரூபாய் 75 லட்சம் வலுக்கட்டாயமாக வரதட்சணை பணம் வாங்கி அந்த பணத்தை செலவு செய்த விதம் குறித்து அனைவரும் ஆச்சரியம் அடைந்து வருகின்றனர்.

ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த அஞ்சலி என்ற பெண்ணுக்கும் பிரவீன் சிங் என்பவருக்கும் நவம்பர் 21 ஆம் தேதி திருமணம் நடந்தது. இந்த திருமணத்திற்கு தனது தந்தையிடம் வரதட்சனை ரூபாய் 75 லட்சம் வேண்டும் என வலுக்கட்டாயமாக மகள் பெற்றுக் கொண்டதாக தெரிகிறது.

பொதுவாக மணமகன் வீட்டில் உள்ளவர்கள் தான் வரதட்சனையை வலுக்கட்டாயமாக கேட்பார்கள் என்பது தெரிந்ததே. ஆனால் இங்கு மகளே தனது தந்தையிடம் 75 இலட்சம் வரதட்சணை கொடுத்தால் தான் இந்த திருமணத்திற்கு சம்மதம் தெரிவிப்பேன் என்று கூறியுள்ளார்.

இதனையடுத்து திருமண தினத்தில் அவர் அந்த பணத்தை தருவதாக உறுதியளித்தார். இந்த நிலையில் திருமணத்திற்கு சில நிமிடங்களுக்கு முன்பு மணமகள் அஞ்சலியின் தந்தை 75 லட்ச ரூபாய் வரதட்சணையை மகளிடம் காசோலையாக நிரப்பிக் கொடுத்து உள்ளார்.

இந்தநிலையில் அந்த திருமணத்திற்கு மடாதிபதி ஒருவர் வருகை தந்தார். அவரிடம் தந்தையிடம் வரதட்சணையாக வாங்கிய 75 லட்சம் காசோலையை மணமகள் கொடுத்து ஆதரவில்லாத மகளிர்கள் தங்கும் இடத்தின் கட்டுமானத்திற்காக நன்கொடையாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அஞ்சலி தெரிவித்தது அனைவரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது.

மேலும் மணமகளின் தன்னலமற்ற குணத்தை பார்த்து அவரது தந்தை உள்பட அனைவரும் அவரை போற்றி பாராட்டி வந்தனர். அஞ்சலியின் தந்தை ஏற்கனவே அதே மடாதிபதி ஒரு கோடிக்கு மேல் நன்கொடை கொடுத்திருந்த நிலையில் அவரது மகள் தனது திருமண வரதட்சணையாக வந்த பணத்தையும் அதே மடாதிபதியிடம் கொடுத்துள்ளார் என்பது ஒரு ஆச்சரியமான தகவலாகும்.

Trending

Exit mobile version