விமர்சனம்

தசரா விமர்சனம்: ரத்தம் தெறிக்க தெறிக்க ஒரு காதல் படம்!

Published

on

இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒதெல்லா இயக்கத்தில் நேச்சுரல் ஸ்டார் நானி, தேசிய விருது வென்ற கீர்த்தி சுரேஷ் பீஸ்ட்டில் நடித்த மலையாள நடிகர் டாம் ஷைன் சாக்கோ, சமுத்திரகனி, பூர்ணா மற்றும் தீக்‌ஷித் ஷெட்டி உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகி உள்ள தசரா திரைப்படம் இன்று வெளியாகி உள்ளது.

சாக்லெட் பாயாக நடித்து வந்த நானி இந்த படத்தில் புஷ்பா அல்லு அர்ஜுன் கெட்டப்பில் ரக்ட் பாயாக வருகிறார். கேஜிஎஃப் படத்தில் தங்க சுரங்கம் கதை என்றால் இது முழுக்க முழுக்க நிரக்கரி சுரங்கத்தை சுற்றிய கதை.

dasara pooja still

அதனால் அந்த ஊரே கருப்பு நிற புழுதியால் நிறைந்திருப்பதால் நானி மற்றும் கீர்த்தி சுரேஷ் என படத்தில் நடித்துள்ள பலருக்கும் இயக்குநர் கரியை அள்ளி முகத்தில் பூசி நடிக்க வைத்திருக்கிறார்.

கீழத்தெருவை சேர்ந்த நானியும் மேலத்தெருவை சேர்ந்த தீக்‌ஷித் ஷெட்டியும் நண்பர்களாக உள்ளனர். சிறு வயதில் இருந்தே கீர்த்தி சுரேஷை காதலித்து வரும் நானி, தனது நண்பன் தீக்‌ஷித் ஷெட்டி கீர்த்தி சுரேஷ் மீது ஆசைப்படும் நிலையில், நட்புக்காக காதலை விட்டுக் கொடுக்கிறார்.

dasara movie still

கீர்த்தி சுரேஷும் ஹீரோவை விட்டு அவர் நண்பரை திருமணம் செய்து கொண்டு செல்ல, உடனடியாக தீக்‌ஷித் ஷெட்டியை வில்லன் க்ரூப் தீர்த்து கட்டுகிறது.

தனது நண்பனை கொன்றவனை கொல்ல அதுவரை சரக்கு அடித்தால் மட்டுமே சக்திமானாக மாறும் நானி முழு நேர சக்திமானாக மாறி சகலரையும் கத்தியால் கிழித்து எறிவது தான் மீதிக்கதை. இறுதியில் தனது காதலியான கீர்த்தி சுரேஷை கரம் பிடித்தாரா? என்பது தான் கிளைமேக்ஸ்.

Tom Chako

படத்தில் மிரட்டல் வில்லனாக டாம் ஷைன் சாக்கோ தனக்கே உரித்தான முக பாவணைகளை காட்டி மிரட்டுகிறார். அவரது அப்பாவாக சமுத்திரகனி நடித்துள்ளார். மனைவியாக பூர்ணா நடித்துள்ளார்.

ஆக்‌ஷன் காட்சிகளில் நானி அடித்து தூள் கிளப்பும் நிலையில், காதல் காட்சிகளில் கீர்த்தி சுரேஷ் நடித்து தூள் கிளப்புகிறார். தெலுங்கு டப்பிங் படமான தசரா பான் இந்தியா படமாக ஜொலிக்கவில்லை. பல இடங்களில் தெலுங்கு பல்லை காட்டுவதை இயக்குநர் தவிர்க்கவே இல்லை. அந்த பாரில் உள்ள சில்க் போஸ்டருக்காகவே கலை இயக்குநருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம் என தியேட்டரில் ரசிகர்கள் கூச்சலிடுகின்றனர்.

சந்தோஷ் நாராயணன் இசையில் படத்தின் பின்னணி இசை மற்றும் பாடல்கள் அருமையாக அமைந்துள்ளன. ஒளிப்பதிவு, சண்டைக் காட்சிகள் என அனைத்துமே படத்திற்கு பலமாகவே உள்ளன. சில இடங்களில் சமீபத்தில் பார்த்த பல படங்களின் பாதிப்புகள் தென்படுவதை தவிர்க்க முடியவில்லை. மொத்தத்தில் ரத்தம் தெறிக்க தெறிக்க ஒரு காதல் தெலுங்கு படத்தை இயக்குநர் கொடுத்திருக்கிறார். டோலிவுட்டில் தசரா தாண்டவம் ஆடும், தமிழ்நாட்டில் தப்பிப்பது கஷ்டம் தான்! ரேட்டிங் – 3/5.

seithichurul

Trending

Exit mobile version