தொழில்நுட்பம்

வாட்ஸ்ஆப் லேட்டஸ்ட் அப்டேட் ’டார்க் மோட்’.. எப்படி பயன்படுத்துவது தெரியுமா?

Published

on

வாட்ஸ்ஆப் செயலியில் புதன்கிழமை அனிமேஷன் ஸ்டிக்கர், QR கோட் மற்றும் நீண்ட காலமாக எதிர்பார்த்துக் காத்திருந்த டார்க் மோட் உள்ளிட்ட புதிய அம்சங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. வாட்ஸ்ஆப்-ன் இந்த டார்க் மோட் சேவை கணினி மற்றும் இணயதளம் என்று இரண்டிலும் கிடைக்கும்.

டார்க் மோட் (Dark Mode) சேவை என்றால் என்ன?

வாட்ஸ்ஆப் செயலியை இரவு நேரத்தில் பயன்படுத்தும் போது வரும் வெளிச்சமானது, கண்களுக்கு அதிகளவில் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே இரவு நேரங்களில் அதிகளவில் இளைஞர்கள் வாட்ஸ்ஆப் செயலியை பயன்படுத்தும் விதமாக டார்க் மோட் சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

வாட்ஸ்ஆப் செயலியில் டார்க் மோட் அம்சத்தைச் செயல்படுத்துவது எப்படி?

1) வாட்ஸ்ஆப் செயலியில் புதிய அம்சங்களைப் பெற, முதலில் அப்டேட் செய்ய வேண்டும். கூகுள் பிளே ஸ்டொர் மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோர் என இரண்டிலும் வாட்ஸ்ஆப் அப்டேட் கிடைக்கும்.

2) வாட்ஸ்ஆப் செயலி அப்டேட் செய்த பிறகு, ‘Settings’-ல் உள்ள Chats-க்கு சென்று ‘Theme’ என்பதை தேர்வு செய்ய வேண்டும்.

 

3) ‘Theme’ என்பதை தேர்வு செய்த பிரகு அதில் Dark என்பதை தேர்வு செய்து OK என்பதை தட்டு வேண்டும். உடனே உங்கள் வாட்ஸ்ஆப் செயலி டார்க் மோட் அம்சத்துக்கு மாறிவிடும். இரவு நேரத்திலும் கண்களுக்குப் பாதிப்பு ஏற்படாமல் வாட்ஸ்ஆப் செயலியை பயன்படுத்த முடியும்.

seithichurul

Trending

Exit mobile version