சினிமா

இரட்டிப்பு மகிழ்ச்சியில் தனுஷ்

Published

on

தனுஷ் நடித்து வெற்றிமாறன் இயக்கி வடசென்னையின் பிரச்சனைகளை மையமாக வைத்து உருவாகி வரும் படம் ‘வட சென்னை’. இதன் முன்னோட்டம் சில நாட்களுக்கு முன் வெளியானது. வெளியான 4 நாட்களிலேயே 5 மில்லியன் பார்வைகளைக் கடந்து வெற்றிநடை போட்டுக் கொண்டிருக்கிறது.

மேலும் பாலிவுட் பிரபலமும் தனுஷின் நண்பருமான ஷாரூக்கானும் இந்த முன்னோட்டம் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் ட்வீட்டியுள்ளார். அதைத் தன் முகநூல் பக்கத்தில் தனுஷ் மிகவும் மகிழ்ச்சியோடு பகிர்ந்திருந்தார்.
இந்த மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கும் விதமாக அவரது மாரி-2 படத்திற்கு நடன இயக்குனரும் அவர் நண்பருமான பிரபுதேவா ஒப்பந்தமாகியிருக்கிறார்.
‘மாரி ஸ்வாக்’ என சொல்லப்படும் மீசையை தொட்டவாறு இருக்கும் கம்பீர ஸ்டைல் ஒன்று மாரி-1 லேயே பிரபலமடைந்திருந்தது. இப்போது அதே ஸ்டைலில் போஸ் கொடுத்து தனுஷூம் பிரபுதேவாவும் பதிவிட்ட புகைப்படம் ரசிகர்களிடம் பெரிதும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.
seithichurul

Trending

Exit mobile version