இந்தியா

படிப்பறிவு குறைந்தவர் பிரதமராக இருப்பது ஆபத்து: அரவிந்த் கெஜ்ரிவால் அதிரடி!

Published

on

பிரதமர் மோடியின் கல்வித்தகுதி குறித்து கேள்வி எழுப்பி அவரது கல்வி சான்றிதழ் வேண்டும் என கோரிக்கை வைத்த டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது. இதற்கு அரவிந்த் கெஜ்ரிவால் தனது டுவிட்டரில் நாட்டுக்கு படிப்பறிவு குறைந்தவர் பிரதமராக இருப்பது ஆபத்து என பதிவிட்டுள்ளார்.

Modi 4

பிரதமர் மோடி 1978-ஆம் ஆண்டு குஜராத் பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டப் படிப்பும், டெல்லி பல்கலைக்கழகத்தில் 1983-ஆம் ஆண்டு முதுகலை பட்டப் படிப்பும் படித்தார் என்று கூறப்பட்டு வருகிறது. இதனால் அது பற்றிய விவரங்களை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பிரதமர் அலுவலகம், டெல்லி பல்கலைக்கழகம் மற்றும் குஜராத் பல்கலைக்கழகத்திடம் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கேட்டிருந்தார்.

ஆனால் இதற்கு எதிராக டெல்லி பல்கலைக்கழகம், குஜராத் பல்கலைக்கழகம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வெளியானது. அதில், பிரதமர் மோடியின் சான்றிதழ் பற்றிய விவரங்களைக் கோரிய டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 25,000 ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

இதற்கு அரவிந்த் கெஜ்ரிவால் தனது ட்விட்டர் பக்கத்தில், பிரதமரின் கல்வி தகுதியை இந்த நாடு அறிய உரிமை இல்லையா. தான் பெற்ற பட்டத்தை அவர் நீதிமன்றத்தில் ஏன் சமர்ப்பிக்கவில்லை. அவர் பெற்ற பட்டம் குறித்து கேள்வி எழுப்புகிறவர்கள் மீது ஏன் அபராதம் விதிக்கப்படுகிறது. நாட்டுக்கு படிப்பறிவு குறைந்தவர் பிரதமராக இருப்பது ஆபத்து என காட்டமாக பதிவிட்டுள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version