சினிமா செய்திகள்

‘சார்பட்டா டான்ஸிங் ரோஸ்’ சபீர் நடிகர் ஆரியின் மாணவராம்..!

Published

on

சார்பட்டா திரைப்படம் மூலம் மிகவும் புகழ் பெற்ற டான்ஸிங் ரோஸ் சபீர் நடிகர் பிக்பாஸ் ஆரி-யின் மாணவராம்.

நடிகர் ஆரி அர்ஜுனன் முன்னர் எல்.வி. பிரசாத் ஃபிலிம் மற்றும் டிவி அகாடெமியில் கெளரவ விரிவுரையாளர் ஆகப் பணியாற்றி வந்துள்ளார். இப்போதும் அவ்வப்போது அந்தக் கல்லூரியில் சிறப்பு வகுப்புகள் எடுக்கும் ஆரி அங்கு நடந்த ஒரு விழாவில் சினிமா ஆர்வம் உள்ள மாணவர்கள் மத்தியில் கலந்துரையாடினார்.

அப்போது ஆரி கூறுகையில், “இன்று சார்பட்டா பரம்பரை திரைப்படத்தின் மூலம் மிகவும் புகழ் பெற்றுள்ள டான்ஸிங் ரோஸ் சபீர் என்னுடைய மாணவர் தான். அவர் என்னுடைய மாணவர் எனக் கூறுவதில் எனக்கு ரொம்ப பெருமையாக உள்ளது. சபீர் போலவே அத்தனை சினிமா பிரிய மாணவர்களும் இந்தத் துறையில் ஊக்கத்துடன் செயல்பட வேண்டும்.

டான்ஸிங் ரோஸ் சபீரின் சாதனையை முன் மாதிரியாக எடுத்துக் கொண்டு சினிமாவில் சாதிக்க தொடர்ந்து உழைக்க வேண்டும். எனக்கு முதலில் இனிது இனிது பட வாய்ப்புக் கொடுத்த பிரகாஷ் ராஜ் மற்றும் குகனுக்கு நன்றி. இன்று படங்களில் பிஸி ஆனதால் வகுப்புகளை தொடர்ச்சியாக எடுக்க முடியவில்லை. ஆனால், அவ்வபோது சினிமா மாணவர்களிடன் வந்து பேசுவது மகிழ்ச்சி அளிக்கிறது” என்றார்.

Trending

Exit mobile version