சினிமா செய்திகள்

நடன சூறாவளி பிரபுதேவாவின் பிறந்த நாள் இன்று!

Published

on

நடன சூறாவளி என்றும், இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் என்றும் அழைக்கப்படும் பிரபுதேவாவின் 47வது பிறந்த நாள் இன்று.

நடன இயக்குநர் சுந்தரம் மாஸ்டரின் மகனான பிரபுதேவா, தனது தந்தையைப் போல தானும் நடன மாஸ்டராக வேண்டும் என்றும் கடினமாக உழைத்தார்.

ஆனால், தந்தையை மிஞ்சிய தனயன் என்பதை போல, நடனம், நடிப்பு, இயக்கம் என சினிமாவின் பல துறைகளில் தூள் கிளப்பினார் இந்த மிஸ்டர் ரோமியோ.

இவர் ஆடிய பேட்ட ராப் பாடல் கானாவின் தேசிய கீதமாக மாறியது. வெண்ணிலவே வெண்ணிலவே பாடல் காதலின் தேசிய கீதமானது. அண்மையில் வெளிவந்த சின்ன மச்சான் செவத்த புள்ள பாடல், குழந்தைகளையும் குத்தாட்டம் போட வைத்துள்ளது.

தமன்னாவுடன் இவர் இணைந்து நடித்துள்ள தேவி 2 மற்றும் பொன்மாணிக்க வேல் படங்கள் ரிலீசுக்கு ரெடியாகி நிற்கின்றன.

மேலும், 4 ஆண்டுகளுக்குப் பிறகு பாலிவுட்டில் சல்மான் கானை வைத்து தபாங் 3 படத்தையும் பிரபுதேவா இயக்கவுள்ளார்.

இவருடைய பிறந்த நாளை இந்தியளவில் ட்விட்டர் ட்ரெண்டிங்கில் வரும்படி பிரபுதேவாவின் ரசிகர்கள் காலை முதல் வாழ்த்து மழைகளை பொழிந்து வருகின்றனர்.

Trending

Exit mobile version