சினிமா செய்திகள்

சாண்டி மாஸ்டரின் க்யூட் குழந்தை: பெயர் என்ன தெரியுமா?

Published

on

பிரபல டான்ஸ் மாஸ்டர் சாண்டி மாஸ்டருக்கு சமீபத்தில் ஆண் குழந்தை பிறந்த நிலையில் அந்த குழந்தையின் புகைப்படங்கள் மற்றும் பெயரை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளார்

பிரபல நடன இயக்குனர் சாண்டி மாஸ்டர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக ஒருவர் இருந்தார் என்பதும் அந்த நிகழ்ச்சியில் அவர் டைட்டிலை வென்று விடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென டைட்டிலை முகின் வென்றதை அடுத்து அவருக்கு இரண்டாவது இடம் கிடைத்தது என்பது தெரிந்ததே

ஆனால் சாண்டி மாஸ்டருக்கு ரசிகர்களின் ஆதரவும் மிகப்பெரிய அளவில் இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சாண்டி மாஸ்டர் பிக் பாஸ் வீட்டில் இருக்கும்போது அவரது மகள் லாலா பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த காட்சிகள் இன்னும் ரசிகர்களுக்கு ஞாபகம் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் சமீபத்தில் அவருக்கு இரண்டாவது குழந்தை பிறந்தது. தனக்கு ஆண் குழந்தை பிறந்ததாகவும் இதனால் தான் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் அவர் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருந்தார். மேலும் குழந்தையின் கை புகைப்படத்தை மட்டும் அவர் பதிவு செய்த நிலையில் தற்போது அவர் குழந்தையின் முழு உருவத்துடன் கூடிய புகைப்படத்தை பதிவு செய்துள்ளார்

மேலும் இந்த குழந்தைக்கு ஷான் மைக்கேல் என்று பெயரிடப்பட்டு இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இவர்தான் எனது ராஜா, இவருடைய பெயர் ஷான் மைக்கேல் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் தன்னுடைய குழந்தையை வாழ்த்தி அனைவருக்கும் தனது நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும் அனைவரது ஆசிர்வாதம் குழந்தைக்கு வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

Trending

Exit mobile version