இந்தியா

கோயிலுக்குள் சென்றதால் ரூ.25 ஆயிரம் அபராதம்: அதிர்ச்சி தகவல்

Published

on

பல புரட்சியாளர்களின் அறிவுரையால் சாதிகள் ஒழிந்து விட்டது என்றும், தீண்டாமை வேறோடு அறுக்கப்பட்டது என்றும் கூறப்படும் 21 ஆம் நூற்றாண்டிலும் கோவிலுக்கு சென்றதால் அபராதம் விதித்த சம்பவம் கர்நாடக மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கர்நாடக மாநிலத்தில் உள்ள பெற்றோர் தனது குழந்தையின் பிறந்த நாளை அடுத்து அருகிலிருந்த கோவிலுக்குச் சென்று சென்றனர். இதனை அடுத்து அந்தப் பெற்றோருக்கு அபராதம் விதிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கர்நாடகா மாநிலம் கோப்பல் மாவட்டத்தில் உள்ள ஹனுமசாகர் அருகில் உள்ள மியபுரா கிராமத்தை சேர்ந்த ஒருவர் தனது 2 வயது குழந்தைக்கு பிறந்த நாள் என்பதை அடுத்து அருகிலிருந்த அனுமான் கோவிலுக்கு குழந்தையை அழைத்துச் சென்று வழிபட்டார். பட்டியலினத்தவர் கோவிலுக்கு செல்லக்கூடாது என ஏற்கனவே அந்த கிராமத்தில் உள்ளவர்கள் தடை விதித்துள்ள நிலையில் அந்த நபர் தடையை மீறி இதையடுத்து அவருக்கு 25 ஆயிரம் ரூபாய் கிராமத்தின் பெரியவர்கள் அபராதம் விதித்துள்ளனர்.

மேலும் கோவிலின் புனிதத் தன்மை கெட்டு விட்டதாகவும் அதற்காக பூஜை செய்ய வேண்டும் என்பதற்காக இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என அவர்கள் விளக்கம் தெரிவித்துள்ளனர்.

இந்த விவகாரம் ஊடகங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதை அடுத்து மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை அதிகாரிகள் அந்த கிராமத்துக்குச் சென்று நேரடியாக விசாரித்தனர். பின்னர் கிராமத்தினரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியதில் அந்த கிராம மக்களுக்கும் பெரியோர்களுக்கும் அறிவுரை கூறியதாகவும் அவர்கள் தங்கள் தவறை உணர்ந்து அந்த குழந்தையின் குடும்பத்தினர்களிடம் மன்னிப்பு கேட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த சம்பவம் கர்நாடக மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending

Exit mobile version