கிரிக்கெட்

IPL தொடரை கேவலப்படுத்திய டேல் ஸ்டெய்ன்; சர்ச்சையானதால் பல்டி!

Published

on

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ-யால் நடத்தப்படும் ஐபிஎல் தொடர் குறித்து தென்னாப்பிரிக்க வேகப் பந்து வீச்சாளர் டேல் ஸ்டெய்ன் முன்பு சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் கருத்து தெரிவித்திருந்தார். தற்போது தன் கருத்திலிருந்து ஸ்டெய்ன் பின்வாங்கியுள்ளார்.

பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டிகளில் விளையாடி வரும் ஸ்டெய்ன், சில நாட்களுக்கு முன்னர் அந்நாட்டு யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்தப் பேட்டியில், ‘பாகிஸ்தான் சூப்பர் லீக், ஸ்ரீலங்கா பிரிமியர் லீகில் கிரிக்கெட்டுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. ஐபிஎல் தொடரைப் பொறுத்தவரையில், அங்கு பேசப்படும் விஷயமே இந்த ஐபிஎல்-ல் எவ்வளவு பணம் கிடைக்கும், எந்தத் தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்டோம் என்பதாகத் தான் இருக்கும்.

ஐபிஎல்லில் மிகப்பெரிய அணிகள் இருக்கின்றன. அங்கு நட்சத்திர கிரிக்கெட் வீரர்கள் விளையாடுகிறார்கள். இதனால் பணம் குறித்தான பேச்சு அங்கு அதிகம் இருக்கும். இதனால் கிரிக்கெட் பற்றி ஏதோ இரு இடத்தில் மறக்கப்படுகிறது என்பதாகவே உணர்கிறேன்’ என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசினார்.

இந்நிலையில் இந்தக் கருத்தைத் திரும்ப பெறும் வகையில் ஸ்டெய்ன், ‘என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையில் ஐபிஎல் ஆழ்ந்த வியப்பை ஏற்படுத்தியது. இது உலகின் மிக பிரமாண்டமான கிரிக்கெட் தொடர்.
இதனை சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் பலரும் பாராட்டியுள்ளனர். நான் ஐபிஎல்லுடன் மற்ற தொடர்களை ஒப்பிட்டு கூறும் எண்ணத்தில் அப்படிப் பேசவில்லை.

நான் தெரிவித்த கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது. சமூக வலைதளங்களில் நான் தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியருப்பதை நான் புரிந்து கொள்கிறேன். நான் தெரிவித்த கருத்து யாருடைய மனதையாவது புண்படுத்தியிருந்தால் அதற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்’ என விளக்கம் கொடுத்துள்ளார்.

 

Trending

Exit mobile version