தினபலன்

தினபலன் – 29-09-2018 – சனிக்கிழமை:

Published

on

மேஷம்

இன்று வருமானத்தில் ஏற்றத் தாழ்வு வரக்கூடும். பிள்ளைகளில் வழியில் மருத்துவச் செலவு வரலாம். அதனால் மனநிம்மதியிழந்து காணப்படுவீர்கள். செய்யும் பணிகளில் தொய்வு வரலாம்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 1, 6, 9

ரிஷபம்

இன்று சண்டை சச்சரவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. தொழிலதிபர்கள் தங்களிடம் பணியாற்றும் ஆட்களின் நலன் கருதி முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். பழைய கடன்களை அடைத்து நிம்மதி பெருமூச்சு அடைவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 7

மிதுனம்

இன்று கிரகிப்புத் திறமை நல்ல படி இருக்கும். அதனால் சில வேலைகள் சுலபமாக முடியும் அளவுக்கு உங்களின் திறமை இருக்கும். ஆனாலும் மனதில் ஏதோ ஒன்று உருத்திக் கொண்டிருக்கும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9

கடகம்

இன்று பிறர் செய்யும் தவறுக்கு நீங்கள் பொறுப்பாவீர்கள். அதனால் உங்களுக்கு மனநிம்மதியும், மகிழ்ச்சியும் தான். போட்டிகள் இருப்பினும் அதை எளிதில் வென்று விடுவீர்கள். பெற்றோருக்கு பெருமை ஏற்படும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், இளஞ்சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 2, 5

சிம்மம்

இன்று கடின உழைப்பு ஏற்பட்டாலும் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு இருப்பதால் குறித்த நேரத்தில் கொடுக்கப்பட்ட வேலைகளை செவ்வனே செய்வீர்கள். மொத்தத்தில் வெற்றிகரமான நாளாக அமையும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9

கன்னி

இன்று புதிதாக திட்டமிடும் அனைத்து காரியங்களும் வெற்றி பெறும். பெண்கள் இன்று அதிக செலவுகளை செய்து குறைந்த மதிப்புள்ள பொருட்களை வாங்க நேரிடும். தூக்கமின்மையால் அவதிப்பட நேரிடும்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள்
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9

துலாம்

இன்று செல்வாக்கும், சொல்வாக்கும் நிறைந்து காணப்படும். முக்கிய விஷயங்களை யாரிடமும் பகிர்ந்து கொள்ள வேண்டாம். ஏனெனில் அது உங்களுக்கு ஆபத்தை விளைவிக்கக் கூடும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9

விருச்சிகம்

இன்று ஆலய தரிசனம் செய்யும் நாள். பழைய சொத்துக்களை விற்று விட்டு புதிதாக வாங்க வேண்டுமென்ற எண்ணம் மேலோங்கும். சிறு வியாபாரிகள் கூட தங்கள் தொழிலை பெரிது பண்ண வேண்டும் என்ற எண்ணத்தில் முயற்சி செய்வீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், இளஞ்சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 2, 5

தனுசு

இன்று வெற்றிகரமான நாள். ஆனால் ஆரோக்கியத்தில் சின்ன சின்ன குறைபாடுகள் வந்து போகும். மிகச் சிலரே உங்கள் நம்பிக்கையை காப்பாற்றுவார்கள். பெண்களுக்கு சந்தோஷமும், மன நிறைவும் ஏற்படும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9

மகரம்

இன்று பிரச்சினைகள் எதுவும் ஏற்படாது. மேலிடத்தின் ஆதரவு உங்களுக்கு முழுமையாக கிடைக்கும். பெற்றோர் குழந்தைகளின் மீது அதிக கவனம் செலுத்த வேண்டியது அவசியம். குடும்ப நிர்வாகம் பிரச்சினை இராது.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 7

கும்பம்

இன்று சிறு விஷயத்திற்காக கூட மனம் வருத்தப்பட்டு கொண்டிருப்பீர்கள். வீட்டிற்குத் தேவையான பொருட்கள் சிலவற்றை வாங்குவீர்கள். சில தடைகள் தொழில் ஏற்பட்டாலும் அது பெரிய அளவில் உங்களை பாதிக்காது.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 1, 6, 9

மீனம்

இன்று உற்சாகமான நாள். உங்கள் உயிருக்கு ஆபத்தான விளையாட்டுகள் எதிலும் ஈடுபடுத்திக் கொள்ள வேண்டாம். வேலை நிமித்தமாக வெளியூர் செல்ல நேரலாம். வீண் கவலைகளை விட்டு விடுங்கள்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம், வெள்ளை
அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9

seithichurul

Trending

Exit mobile version