Connect with us

தினபலன்

தினபலன் 28-02-2019 வியாழக்கிழமை

Published

on

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசிபலன், Tamil Horoscope, Daily Horoscope in Tamil, Horoscope in Tamil

மேஷம்:

இன்று தந்தையின் உடல்நிலையில் கவனம் தேவை. அவருக்காக செலவு செய்ய வேண்டி இருக்கும். சிலருக்கு இடமாற்றம் உண்டாகலாம். தொழில் வியாபாரத்தில் லாபம் கூடும். ஆனால் கைக்கு பணம் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். புதிய ஆர்டர்கள் கூடுதலாக உழைப்பதன் பேரில் கிடைக்கும். பணவரத்து கூடும். உடல் சோர்வு உண்டாகலாம்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

அதிர்ஷ்ட எண்: 2, 9

ரிஷபம்:

இன்று வாடிக்கையாளர்களை திருப்தி செய்ய முற்படுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேன்மை அடைவார்கள். குடும்பத்தில் இருப்பவர்கள் உங்கள் விருப்பத்திற்கு மாறாக எதையும் செய்வார்கள். கணவன் மனைவிக்கிடையே சில்லறை பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். பிள்ளைகள் மூலம் மதிப்பு உயரும். முன்விரோதம் காரணமாக சில சங்கடங்கள் உருவாகலாம், என்றாலும் அவற்றை சமாளிக்கும் வழிகள் உங்களுக்கு புலப்படும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை

அதிர்ஷ்ட எண்: 9, 3

மிதுனம்:

இன்று நண்பர்கள் மூலம் நன்மை உண்டாகும். தன்னம்பிக்கையுடன் துணிச்சலாக எதிலும் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள். எதிர்பாராத செலவு உண்டாகும். இரவு பகலாக உழைக்க வேண்டி இருக்கும். அடுத்தவர் வேலையையும் தானே செய்யும் நிலை உருவாகும். எனினும் உதவிகள் கிடைக்கும். குடும்பத்தில் குதூகலம் ஏற்படும். தம்பதிகளிடையே அன்பு மேலோங்கும். பிரிந்த குடும்பம் ஒன்றுசேரும்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம்

அதிர்ஷ்ட எண்: 4, 6

கடகம்:

இன்று வரவேண்டிய பணம் இழுபறியாக இருந்தாலும் வந்து சேரும். அரசியல்வாதிகளுக்கு மேலிடத்திலிருந்து சந்தோஷமான செய்தி வரும். தொண்டர்கள் உங்கள் சொல்படி நடந்து கொள்வது உங்களுக்கு மகிழ்ச்சியைத் தரும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் காண கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். எதிலும் சிறிதளவு ஆதாயம் ஏற்படும்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, வெளிர் நீலம்

அதிர்ஷ்ட எண்: 5, 6

சிம்மம்:

இன்று பிள்ளைகளின் -கல்விக்கான செலவு கூடும். இல்லறத்தில் இருந்த சச்சரவு தீரும். பலவிதத்திலும் பணவரத்து உண்டாகும். ஆனாலும் சுபச்செலவுகள் அதிகரிக்கும். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த காரியங்கள் நன்றாக நடந்து முடியும். எதையும் செய்து முடிக்கும் சாமர்த்தியம் வரும். பணப்புழக்கம் அதிகரிக்கும். எடுத்த காரியம் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். மதிப்பு மரியாதை சிறப்படையும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, வெளிர் நீலம்

அதிர்ஷ்ட எண்: 3, 7

கன்னி:

இன்று கொடுத்த வாக்கை காப்பாற்ற பாடுபடுவீர்கள். வெளியூர் பயணம் செல்ல நேரிடும். அடுத்தவர் பிரச்சனைகளில் தலையிடாமல் ஒதுங்கி செல்வது நல்லது. ஆரோக்கியம் சம்பந்தமான குறைபாடு வரலாம். தொழில் வியாபாரத்தில் வேகமான முன்னேற்றம் இருப்பது கடினம். எதிர்த்து செயல்பட்டவர்கள் ஒதுங்கி விடுவார்கள். நீண்ட நாள் கஷ்டங்கள் நீங்கும்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, பச்சை

அதிர்ஷ்ட எண்: 1, 7

துலாம்:

இன்று சரக்குகளை வாடிக்கையாளர்களுக்கு அனுப்பும் போது கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்கள் மற்றவர்களை நம்பி பொறுப்புகளை ஒப்படைக்காமல் இருப்பது நல்லது. குடும்பத்தில் சுபகாரியங்கள், மகிழ்ச்சியான கொண்டாட்டங்கள் இருக்கும். அதேநேரத்தில் கணவன், மனைவிக்கிடையே ஏதேனும் மனவருத்தம் ஏற்படலாம்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு

அதிர்ஷ்ட எண்: 4, 5

விருச்சிகம்:

இன்று அக்கம் பக்கத்தினருடன் சில்லறை சண்டைகள் வரலாம் கவனமாக இருப்பது நல்லது. பிள்ளைகளை அவர்கள் போக்கில் விட்டு பிடிப்பது நல்லது. தடைபட்ட காரியங்கள் தடைநீங்கி நல்லபடியாக நடந்து முடியும். பணவரத்து திருப்தி தரும். செய்யும் உத்தியோகத்தில் இடமாற்றமோ அல்லது பணி நிரந்தரமோ ஏற்படலாம்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை

அதிர்ஷ்ட எண்: 5

தனுசு:

இன்று கடுமையாக உழைப்பின் மூலம் முன்னேற வேண்டி இருக்கும். நண்பர்களின் உதவியால் நன்மைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்திக் கொள்வது நல்லது. வெளியூர் பயணம் செல்ல வேண்டி இருக்கும். மேலிடத்திலிருந்து முக்கிய பொறுப்புகள் உங்கள் கையில் வரும். அரசுப்பணியில் உள்ளவர்கள் உடன் பணிபுரிகின்றவர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம்

அதிர்ஷ்ட எண்: 2, 3

மகரம்:

இன்று சந்தோஷமான செய்தி வந்து சேரும். மாணவர்கள் பாடங்களை கவனமாக படித்து கூடுதல் மதிப்பெண் பெற முயற்சிகளை மேற்கொள்வீர்கள். மனநிம்மதி கிடைக்கும். சில குழப்பங்கள் நேர்ந்தாலும் இதுவரை நடக்காமல் இருந்த காரியத்தை சிறப்பாக செய்து முடித்து மனநிம்மதி அடைவீர்கள். மேலதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் மஞ்சள்

அதிர்ஷ்ட எண்கள்: 3, 9

கும்பம்:

இன்று அரசாங்கம் மூலம் நடக்க வேண்டிய காரியங்கள் நடந்து முடியும். முக்கிய நபர்கள் மூலம் எதிர்பார்த்த உதவியும் கிடைக்கும். பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். ஆடம்பர செலவுகள் அதிகரிக்கும். நண்பர்கள், உறவினர்கள் மத்தியில் கவுரவம் கூடும். தூரத்திலிருந்து வரும் செய்திகள் உங்கள் மனதிற்கு மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள், நீலம்

அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7

மீனம்:

இன்று தொழில் வியாபாரம் நன்கு நடக்க தேவையான உதவிகள் கிடைக்கும். வாடிக்கையாளர் தேவை அறிந்து பொருள்களை அனுப்பி அவர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் திறமையாக பணிகளை செய்து முடித்து நிர்வாகத்தில் நல்ல பெயர் பெறுவார்கள். குடும்பத்தில் உள்ளவர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள். சிக்கன நடவடிக்கையை மேற்கொள்வீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளஞ்சிவப்பு, நீலம்

அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9

ஆன்மீகம்2 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆரோக்கியம்3 மணி நேரங்கள் ago

கேஸ் சிலிண்டரை 2 மாதத்திற்கும் மேல் நீடிக்க வைக்கும் சில டிப்ஸ்: மழைக்காலத்திற்கு சிறப்பு டிப்ஸ்:

ஆரோக்கியம்3 மணி நேரங்கள் ago

கொசுக்கள்: இரத்தம் குடிப்பதற்கும், நோய்களை பரப்புவதற்கும் காரணம் என்ன?

ஆன்மீகம்3 மணி நேரங்கள் ago

ஆடி மாதம்: சுபகாரியங்கள் செய்யலாமா? செய்ய கூடாதா?

வேலைவாய்ப்பு3 மணி நேரங்கள் ago

ரூ.1,09,740/- ஊதியத்தில் JIPMER ஆணையத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்3 மணி நேரங்கள் ago

கேரள சுவையில் நெத்திலி மீன் அவியல்: ஒரு சுவையான ரெசிபி!

வேலைவாய்ப்பு3 மணி நேரங்கள் ago

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு3 மணி நேரங்கள் ago

THDC-ல் வேலைவாய்ப்பு!

செய்திகள்4 மணி நேரங்கள் ago

கர்நாடக தனியார் துறை இடஒதுக்கீடு மசோதா நிறுத்தி வைப்பு: சித்தராமையா அறிவிப்பு

வேலைவாய்ப்பு4 மணி நேரங்கள் ago

ரூ.80,000/- ஊதியத்தில் மத்திய அரசில் ஜாக்பாட் வேலைவாய்ப்பு!

ஆன்மீகம்1 நாள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை1 நாள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்4 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்19 மணி நேரங்கள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்19 மணி நேரங்கள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

பல்சுவை4 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

சினிமா5 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!

டிவி5 நாட்கள் ago

TRP-யில் முதல் இடத்தை பிடித்தது சிறகடிக்க ஆசை! சிங்கப்பெண்ணே இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது!