Connect with us

தினபலன்

உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (24/05/2020)

Published

on

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசிபலன், Tamil Horoscope, Daily Horoscope in Tamil, Horoscope in Tamil

24-05-2020

ஞாயிற்றுக்கிழமை

மேஷம்

இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியும், சுபிட்சமும் உண்டாகும். கணவன்-மனைவியிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் விலகும். தடைப்பட்ட சுபகாரியங்கள் அனைத்திலும் வெற்றி கிட்டும். வீடு, மனை, வண்டி வாகனம் வாங்கக்கூடிய யோகமும், அசையா சொத்துகளால் அனுகூலமும் உண்டாகும்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம், சிவப்பு

அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 7

 

ரிஷபம்

இன்று புதிய பொருட்சேர்க்கையும், ஆடை ஆபரணமும்  சேரும். பிரிந்த உறவினர்களும் தேடிவந்து நட்புக்கரம் நீட்டுவார்கள். உடல்நலத்தில் சற்று கவனம் எடுத்துக்கொண்டால் தேவையற்ற மருத்துவச் செலவுகளைத் தவிர்க்க முடியும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு

அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9

 

மிதுனம்

இன்று புதிய தொழில் தொடங்கவும், பெரிய முதலீடுகளில் விரிவு செய்யவும் ஏதுவான காலமாக இருக்கும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் திருப்தியுடன் செயல்படுவார்கள். எதிர்பார்க்கும் உயர்வுகளும் கிடைக்கப்பெறும்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம், இளஞ்சிவப்பு

அதிர்ஷ்ட எண்கள்: 2, 5

 

கடகம்

இன்று  சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றங்களும் கிடைக்கப்பெறுவதால் குடும்பத்தோடு சேர்ந்து மகிழ்ச்சியடைவார்கள். கொடுக்கல்-வாங்கல் லாபம் தரும்.  பயணங்களால் அனுகூலமான பலன்கள் உண்டாகும்.  பெயர், புகழ் உயரக்கூடிய காலமாக அமையும். 

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்

அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9

 

சிம்மம்

இன்று பணம் பலவழிகளில் தேடிவந்து சேரும். மனதில் தைரியமும் துணிவும் உண்டாகி எதிரிகளை வெல்லக்கூடிய ஆற்றலைக் கொடுக்கும்.  ஆரோக்கியத்தில் அதிக கவனம் எடுத்துக்கொள்வது நல்லது. குடும்பத்தில் உள்ளவர்களால் இருந்த மருத்துவச்செலவுகள் குறையும். 

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள்

அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9

 

கன்னி

இன்று உற்றார்- உறவினர்களிடையே ஒற்றுமை சுமாராக இருக்கும். கணவன்-மனைவி உறவில் கருத்து வேறுபாடு ஏற்படலாம் என்பதால் அனுசரித்துச்செல்வது நல்லது. திருமண சுபகாரியங்கள் தடபுடலாக நிறைவேறும். புத்திரவழியில் பூரிப்பும், மகிழ்ச்சியும் ஏற்படும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்

அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9

 

துலாம்

இன்று கொடுக்கல்-வாங்கலில் பெரிய தொகையை எளிதில் ஈடுபடுத்தி லாபம் காணமுடியும். கடன்கள் பைசலாகும். கூட்டுத்தொழிலில் அபரிதமான லாபத்தை அடையமுடியும். உத்தியோகஸ்தர்களுக்குத் தடைப்பட்ட பதவி உயர்வுகள் கிடைக்கப்பெற்று பணியில் திருப்தியானநிலை ஏற்படும்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம், இளஞ்சிவப்பு

அதிர்ஷ்ட எண்கள்: 2, 5

 

விருச்சிகம்

இன்று  செல்வம், செல்வாக்கு உயரும். கலைஞர்களுக்குப் புதிய வாய்ப்புகள் தேடிவரும். தேவையற்ற பயணங்களைத் தவிர்த்தால் அலைச்சலைக் குறைத்துக்கொள்ள முடியும். மாணவர்கள் திறம்பட செயல்பட்டு கல்வியில் முன்னேற்றம் அடைவார்கள்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு

அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9

 

தனுசு

இன்று எதிலும் சற்று ஏற்ற இறக்கமான பலன்களைப் பெறுவீர்கள். குடும்பத்தில் சிறுசிறு ஒற்றுமைக்குறைவுகள் உண்டாகும் என்றாலும் பெரிய பிரச்சினைகள் ஏற்படாது. தேவையின்றி பிறர் விஷயத்தில் தலையீடு செய்வதைத் தவிர்ப்பது, பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. 

அதிர்ஷ்ட நிறம்: நீலம், சிவப்பு

அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 7

 

மகரம்

இன்று திருமணம் போன்ற சுபகாரியங்களுக்கான முயற்சிகள் மேற்கொள்வதை சற்றுத் தள்ளிவைப்பது உத்தமம். பணவரவுகள் தேவைக்கேற்றபடி இருக்கும் என்றாலும் ஆடம்பரச் செலவுகளைத் தவிர்க்கவும். பணம் கொடுக்கல் -வாங்கலில் மிகவும் கவனமுடன் நடந்து கொண்டால் நற்பலனை அடையமுடியும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு

அதிர்ஷ்ட எண்கள்: 1, 6, 9

 

கும்பம்

இன்று உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் திறம்பட செயல்பட்டு அனைவரின் பாராட்டுதல்களைப் பெறுவார்கள். தொழில், வியாபாரம் செய்பவர்கள் கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக்கொள்வது, கூட்டாளிகளையும், தொழிலாளர்களையும் அனுசரித்துச்செல்வது போன்றவற்றால் அபிவிருத்தி பெருகும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம், வெள்ளை

அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9

 

மீனம்

இன்று எதிர்பாராத திடீர்தனவரவுகள் கிடைக்கப்பெறுவதால் மனமகிழ்ச்சி ஏற்படும். மாணவர்களுக்கு கல்வியில் சற்று மந்த நிலையே நிலவும். விளையாட்டுப்போட்டிகளில் ஈடுபடும்போது கவனமுடன் இருப்பது நல்லது. 

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை, வெள்ளை

அதிர்ஷ்ட எண்கள்: 5, 9

author avatar
seithichurul
Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்10 நிமிடங்கள் ago

இன்றைய ராசி பலன் (ஆகஸ்ட் 17, 2024)

ஆரோக்கியம்10 மணி நேரங்கள் ago

பிளம்ஸ்: இயற்கையின் இனிப்பு மருந்து!

ஆரோக்கியம்10 மணி நேரங்கள் ago

பல் பொடி vs பற்பசை: எது சிறந்தது?

வேலைவாய்ப்பு10 மணி நேரங்கள் ago

ரூ.2,40,000/- ஊதியத்தில் ESIC ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

இந்தியா10 மணி நேரங்கள் ago

கர்நாடகா அரசின் SBI, PNB வங்கி கணக்குகள் மூடல் உத்தரவு: தற்காலிக நிறுத்தம்!

ஆன்மீகம்10 மணி நேரங்கள் ago

ஆவணி அவிட்டம் 2024: பூணூல் மாற்ற உகந்த நேரம் மற்றும் முக்கியத்துவம்!

வேலைவாய்ப்பு10 மணி நேரங்கள் ago

NLC ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

உலகம்10 மணி நேரங்கள் ago

H-1B விசா: இந்த ஆண்டும் இரண்டாம் சுற்று குலுக்கல்

ஆன்மீகம்10 மணி நேரங்கள் ago

புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் பொழியும்!

ஆரோக்கியம்10 மணி நேரங்கள் ago

தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிட வேண்டும் என்பதற்கான 9 காரணங்கள்!

வணிகம்5 நாட்கள் ago

ஒரு ஆண்டில் 42,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த ரிலையன்ஸ்!

வணிகம்4 நாட்கள் ago

இன்று தங்கம் விலை உயர்வு!(12-08-2024)

சினிமா3 நாட்கள் ago

டிமாண்டி காலனி 2 விமர்சனங்கள்: ரசிகர்கள் சொல்லும் கருத்துக்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்4 நாட்கள் ago

பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (PMAY)- நகர்ப்புறம் 2.0-க்கு அமைச்சரவை ஒப்புதல்: தகுதி என்ன? மானியம் எவ்வளவு? முழுவிவரம்

சினிமா2 நாட்கள் ago

தங்கலான் திரைப்படம்: விமர்சனம், ரேட்டிங், ரிலீஸ் விவரங்கள்!

வணிகம்3 நாட்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் குறையும் தங்கம் விலை (14/08/2024)!

வணிகம்3 நாட்கள் ago

அதிரடியாக தங்கம் விலை உயர்வு.. சவரன் எவ்வளவு?(13-08-2024)

பர்சனல் ஃபினான்ஸ்7 நாட்கள் ago

ஓய்வு காலத்தில் நிலையான மாத வருமானம் வழங்கும் 5 சிறந்த திட்டங்கள்!

வணிகம்6 நாட்கள் ago

செபி தலைவர் மீதான ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டு: அதிர்ச்சியளிக்கும் புகார்

வணிகம்3 நாட்கள் ago

தங்கம் வாங்குவது நல்லதா? தங்கம் மியூச்சுவல் ஃபண்ட் வாங்குவது நல்லதா?