Connect with us

தினபலன்

உங்கள் ராசிக்கான இன்றைய தினபலன்கள் (06/11/2019)

Published

on

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசிபலன், Tamil Horoscope, Daily Horoscope in Tamil, Horoscope in Tamil

6-Nov-19

புதன்கிழமை

மேஷம்:

இன்று தொழில் வியாபாரம் சிறப்படையும். வியாபார வளர்ச்சிக்கு இருந்த தடைகள் நீங்கும். பழைய பாக்கிகள் வசூலாகும். அரசாங்கம் தொடர்பான விஷயங்கள் சாதகமாக முடியும். உத்தியோகத்தில் பதவிஉயர்வு உண்டாகும். நீண்ட தூர பயணங்களால் காரிய அனுகூலம் உண்டாகும். சக பணியாளர்கள் மூலம் உதவியும் கிடைக்க பெறுவீர்கள்.குடும்பத்தில் இருந்த இறுக்கம் நீங்கி மனம் மகிழ்ச்சியடையும் விதமாக சம்பவங்கள் நடக்கலாம். உறவினர் மூலம் தேவையான உதவியும் கிடைக்கும். குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். வழக்குகளை தள்ளிப்போடுவது நல்லது.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, நீலம்

அதிர்ஷ்ட எண்கள்: 1, 2, 7

ரிஷபம்:

இன்று தொழில், வியாபாரம் எதிர்பார்த்ததை விட சற்று நிதானமாகவே நடக்கும். பழைய பாக்கிகளை வசூல் செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்ற நிலை காண்பார்கள். மனதில் இருந்த குழப்பங்கள் நீங்கி தெளிவு உண்டாகும். குடும்பத்தில் உற்சாகம் இருக்கும். மற்றவர்கள் உங்களை அனுசரித்து செல்வார்கள். தம்பதிகளுக்கிடையே மகிழ்ச்சியான நிலை காணப்படும். பிள்ளைகளுக்கு மருத்துவ செலவு ஏற்படலாம். பேச்சின் இனிமை சாதூரியத்தால் எளிதில் காரியங்கள் கைகூடும். பெண்களுக்கு எதிர்பாராமல் நடக்கும் சம்பவங்களால் நன்மை உண்டாகும். மன குழப்பம் நீங்கும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சை

அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5

மிதுனம்:

இன்று எதிர்காலத்துக்கு உதவக்கூடிய விஷயங்களில் ஆர்வம் உண்டாகும். ஆன்மீக சிந்தனை அதிகரிக்கும். உத்தியோகத்தில் உயர்வு உண்டாகும். மனதில் இருந்த குழப்பம் நீங்கி தைரியம் ஏற்படும். போட்டிகளில் பங்கு பெற ஆர்வம் உண்டாகும். அரசியல்வாதிகளின் பதவிகளுக்கு நெருங்கிய நண்பர்கள் மூலமாகவே சில இடையூறுகள் ஏற்படலாம். அதனால் எவரிடமும் மனம் திறந்து பேச வேண்டாம். மற்றபடி தொண்டர்கள் உங்கள் பேச்சைக் கேட்டு நடப்பதால் உற்சாகமடைவீர்கள். உங்கள் செயல்களை நேர்த்தியாகச் செய்வீர்கள்.மாணவர்களுக்கு கல்வி தொடர்பான சந்தேகங்கள் உண்டாகலாம். உடனுக்குடன் அவற்றை கேட்டு தெரிந்து கொள்வது நல்லது.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள், நீலம்

அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7

கடகம்:

இன்று எதிலும் கூடுதல் கவனத்துடன் இருப்பது நல்லது. வீண் அலைச்சல் காரியதாமதம் உண்டாகலாம். குடும்பத்தில் அமைதி ஏற்படும். லாப நஷ்டங்களையும் அறிந்து அதற்கேற்றவாறு செயல்படுவீர்கள். மனகுழப்பம் நீங்கி தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். அரசியல்வாதிகள் அனைவரையும் அரவணைத்துச் செல்வீர்கள். கட்சி மேலிடத்தின் கனிவான பார்வை உங்கள் மீது விழுந்து, உங்கள் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேறும். அரசு அதிகாரிகளும் உங்கள் நேர்மையான ஆலோசனைகளை மதித்து நடப்பார்கள். அவர்களால் உங்களின் செல்வாக்கு தொண்டர்களிடம் உயர்ந்து காணப்படும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளஞ்சிவப்பு, நீலம்

அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9

சிம்மம்:

இன்று ஆக்கபூர்வமான யோசனைகளையும் காரிய வெற்றியும் வந்து சேரும். மற்றவர்களிடம் பழகும் போது கவனமாக இருப்பது நல்லது. சமூகத்தில் கவுரவம் அந்தஸ்து அதிகரிக்கும். தொழில் வியாபாரம் தொடர்பான பணிகளில் கூடுதல் கவனம் செலுத்தி அவற்றை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். அடுத்தவரை அனுசரித்து செல்வதில் கெட்டிக்காரர்களான எதிர்பார்த்த காரியங்கள் சாதகமாக நடக்கும். எதிலும் கவனமுடன் செயல்படுவது நல்லது. எதிர்பாராத சில சம்பவங்கள் நடக்கலாம். அதனால் உங்களுக்கு நன்மையும் உண்டாகலாம். ஆன்மிக பணிகளில் நாட்டம் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள்

அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9

கன்னி:

இன்று குடும்பத்தில் கலகலப்பு காணப்படும். வாழ்க்கை துணை உங்களை அனுசரித்து செல்வார். இதனால் மனதில் இருந்த கவலைகள் நீங்கும். உறவினர்கள் வருகை இருக்கும். பிள்ளைகள் எதிர்காலம் கருதி சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். வழக்குகளில் நிதான போக்கு காணப்படும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் லாபம் தருவதாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகள் கொடுத்த வேலைகளை கவனமாக செய்து முடித்து பாராட்டு பெறுவார்கள். செயல் திறமை அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்

அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9

துலாம்:

இன்று குடும்பத்தில் சுகமும், நிம்மதியும் இருக்கும். குடும்பத்திற்கு அதிகப்படியான வருமானமும் கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே சகஜ நிலை காணப்படும். குழந்தைகள் திறமையை கண்டு அவர்களை பாராட்டுவீர்கள். உறவினர் வருகை இருக்கும். யாரிடம் பேசும் போதும் நிதானமாக பேசுவது நன்மை தரும். கலைத்துறையினருக்கு அனுகூலமான திருப்பங்கள் உண்டாகும். பாராட்டும், பணமும் உங்கள் உள்ளத்தை உற்சாகப்படுத்தும். சக கலைஞர்கள் நட்புடன் பழகுவார்கள். அவர்களால் உங்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். ரசிகர் மன்றங்களுக்குச் செலவு செய்து மகிழ்வீர்கள்

அதிர்ஷ்ட நிறம்: நீலம், இளஞ்சிவப்பு

அதிர்ஷ்ட எண்கள்: 2, 5

விருச்சிகம்:

இன்று எதிலும் மிகவும் கவனமாக ஈடுபடுவது நன்மை தரும். திட்டமிட்டு செயல்படுவது வெற்றிக்கு உதவும். பணவரத்து அதிகரிக்கும். அதே நேரத்தில் செலவும் கூடும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். துணிச்சல் உண்டாகும். அதனால் எதை பற்றியும் முன்பின் யோசிக்காமல் செயல்களில் இறங்கி விடுவீர்கள். தேவையற்ற இடமாற்றம் உண்டாகலாம். தொழில் வியாபாரம் விறுவிறுப்படையும். கடந்த காலங்களில் இருந்த மந்த நிலை மாறும். வாடிக்கையாளர்களை அனுசரித்து செல்வது நன்மை தரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகளின் சொல்படி நடந்து கொள்வது நல்லது. பணவரத்து திருப்திகரமாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு

அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9

தனுசு:

இன்று குடும்பத்தில் கலகலப்பு இருக்கும். கூடவே மனதில் ஒருவித கவலையும் இருந்து வரும். வாழ்க்கை துணையுடன் எதையும் பேசி தீர ஆலோசித்து செய்வது நன்மை தரும். பிள்ளைகள் அன்பு செலுத்துவார்கள். ஆனால் அவர்களுக்காக செலவு செய்ய நேரிடும்தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு கீழ்நிலையில் உள்ளவர்களால் லாபம் கிடைக்க பெறுவீர்கள். சரக்குகளை பாதுகாப்பாக வைத்துக் கொள்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் எந்த ஒரு வேலையையும் செய்து முடிப்பதில் வேகம் காட்டுவார்கள். சக ஊழியர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம், சிவப்பு

அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 7

மகரம்:

இன்று குடும்பத்திற்கு தேவையான பொருட்கள் வாங்குவதன் மூலம் செலவு உண்டாகும். சகோதரர்கள் மூலம் உதவி கிடைக்கும். உறவினர்கள் வருகை இருக்கும் பிள்ளைகளிம் அனுசரணையாக நடந்து கொள்வது நன்மைதரும். பெண்கள் எந்த ஒரு காரியத்தையும் துணிச்சலாக செய்து முடிப்பீர்கள். தேவையான உதவிகள் கிடைக்கும். மாணவர்களுக்கு பாடங்களை படிப்பதில் சுறுசுறுப்பு காணப்படும். மற்றவர்களை விட கூடுதலாக படிக்க வேண்டும் என்ற எண்ணம் உண்டாகும்.கலைத்துறையினருக்கு திறமைக்கேற்ற புகழும், கௌரவமும் கட்டாயம் கிடைக்கும். பண வரவில் முன்னேற்றம் உண்டாகும். நண்பர்கள் மூலம் தக்க சமயத்தில் தேவையான உதவிகளைப் பெறுவீர்கள். அமைதியாகச் செயலாற்றுவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு

அதிர்ஷ்ட எண்கள்: 1, 6, 9

கும்பம்:

இன்று துணிச்சலுடன் ஈடுபட்டு காரிய வெற்றி காண்பீர்கள். பணவரத்து திருப்தி தரும். வாக்கு வாதத்தை தவிர்ப்பது நன்மைதரும். எதிலும் மிகவும் கவனமாக ஈடுபடுவது நல்லது. பிள்ளைகள் பற்றிய கவலை நீங்கும். உடல் ஆரோக்கியம் உண்டாகும்.புத்தி கூர்மையுடன் செயல்பட்டு எந்த சிக்கலையும் தீர்க்கும் எந்த ஒரு விஷயத்தையும் கவனமுடன் கையாள்வது நல்லது. எல்லா காரியங்களிலும் அனுகூலம் உண்டாகும். முக்கிய நபர்களின் உதவியும் கிடைக்கும். மனதில் தன்னம்பிக்கை ஏற்படும். எந்த ஒரு காரியத்தையும் துணிச்சலாக செய்து வெற்றி பெறுவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம், வெள்ளை

அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9

மீனம்:

இன்று வீண் மனக்குழப்பம் ஏற்பட்டு நீங்கும். மற்றவர்களுக்கு உதவபோய் வீண் பிரச்சனையில் சிக்கி கொள்ளலாம். திடீர் கோபம் ஏற்படும். தேவையற்ற வீண் செலவுகளும் உண்டாகும். ஆன்மிக எண்ணம் ஏற்படும். தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களில் இழுபறியான நிலை காணப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கூடுதல் பணிச்சுமையும், வீண் அலைச்சலும் உண்டாகும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை, வெள்ளை

அதிர்ஷ்ட எண்கள்: 5, 9

author avatar
seithichurul
பிற விளையாட்டுகள்38 நிமிடங்கள் ago

பாரிஸ் ஒலிம்பிக் 2024: வெண்கலப் பதக்கத்துடன் இந்தியாவின் கணக்கைத் தொடங்கிய மனு பகர்

இந்தியா55 நிமிடங்கள் ago

போன் திருடு போனதா? வங்கி கணக்கில் பணம் திருட்டா? இந்த நம்பருக்கு போன் பண்ணுங்க போதும்!

உலகம்3 மணி நேரங்கள் ago

இந்தியாவில் செருப்பு இல்லாமல் நடப்பது ஏன் கேவலம்? ஆஸ்திரேலியாவில் பெருமை ஏன்?

செய்திகள்3 மணி நேரங்கள் ago

ராக்ஷாபந்தன் எதிரொலி விமான டிக்கெட் கட்டணங்கள் 46% வரை உயர்வு!

பிற விளையாட்டுகள்4 மணி நேரங்கள் ago

பாரிஸ் ஒலிம்பிக் 2024: ஜூலை 28, 2024 – இந்தியாவின் முழு அட்டவணை

பர்சனல் ஃபினான்ஸ்5 மணி நேரங்கள் ago

இந்தியாவில் உள்ள மூத்த குடிம்மக்களுக்கான இந்த 8 நிதி நலன்கள் பற்றி எல்லாம் தெரியுமா?

ஆரோக்கியம்5 மணி நேரங்கள் ago

கேரளா சிப்ஸ்: இனி வீட்டிலேயே சுவையாக செய்து சாப்பிடலாம்!

சிறு தொழில்5 மணி நேரங்கள் ago

இன்ஸ்டாகிராமில் பணம் சம்பாதிப்பது எப்படி? 5 எளிய வழிகள்

ஆன்மீகம்5 மணி நேரங்கள் ago

கடன் தொல்லையா? இன்று ஆடி அஷ்டமி! பைரவருக்கு இந்த விளக்கேற்றி வழிபடுங்கள்!

சினிமா5 மணி நேரங்கள் ago

தனுஷின் ‘ராயன்’, இரண்டு நாளில் ரஜினியின் ‘லால் சலாம்’ வசூலை முறியடித்தது!

பல்சுவை6 நாட்கள் ago

“கேரளா ஸ்டைல் கடலை கறி: சுவையான மற்றும் சத்தான குழம்பு”!

வணிகம்5 நாட்கள் ago

மின்னல் வேகத்தில் குறையும் தங்கம் விலை (23/07/2024)!

வணிகம்4 நாட்கள் ago

திடீர் எனச் சரிந்து வரும் தங்கம் விலை (24/07/2024)!

வணிகம்5 நாட்கள் ago

பட்ஜெட் 2024-25-இல் ஸ்டார்ட்அப்-களுக்கு அடித்த ஜாக்பாட்!

வணிகம்5 நாட்கள் ago

2024 பட்ஜெட்: விலை குறையும், அதிகரிக்கும் பொருட்கள்

வணிகம்5 நாட்கள் ago

பட்ஜெட் 2024: உங்கள் குழந்தையின் எதிர்காலத்திற்காக முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளீர்களா? புதிய திட்டம் – என்.பி.எஸ். வாத்ஸல்யா

வேலைவாய்ப்பு7 நாட்கள் ago

அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!

வணிகம்5 நாட்கள் ago

ஆனந்த் அம்பானி திருமண பரிசுகள்: பிரைவேட் ஜெட் முதல் ஃபாரின் பங்களா வரை!

வணிகம்3 நாட்கள் ago

தங்கத்தின் விலை இன்று காலை குறைந்தது (25.07.2024) என்ன காரணம்?

வணிகம்5 நாட்கள் ago

பட்ஜெட் 2024: தமிழ்நாட்டுக்கு கிடைத்து என்ன?