Connect with us

தினபலன்

உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (06/05/2020)

Published

on

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசிபலன், Tamil Horoscope, Daily Horoscope in Tamil, Horoscope in Tamil

06-05-2020

புதன்கிழமை

மேஷம்:

இன்று குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் குறையும். கணவன் மனைவிக்கிடையே இருந்து வந்த மனகசப்பு மாறும். புதிய சுபகாரிய முயற்சிகள் சில தடைகளுக்குப்பின் நிறைவேறும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் அன்றாடப் பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்படும் ஆற்றலைப் பெறுவீர்கள். புத்திரவழியில் மகிழ்ச்சி நிலவும்.

அதிர்ஷ்டநிறம்: மஞ்சள், பச்சை

அதிர்ஷ்ட எண்கள்:  2, 5, 9

ரிஷபம்:

இன்று முயற்சிகளில் தடை தாமதங்களைச் சந்திக்க நேரிடும் என்றாலும் எதிலும் எதிர்நீச்சல் போட்டாவது முன்னேறிவிடுவீர்கள்.  கணவன்-மனைவியிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது.  உற்றார்-உறவினர்களின் ஆதரவு ஓரளவுக்கு திருப்தியளிக்கும்.

அதிர்ஷ்டநிறம்: மஞ்சள், வெள்ளை

அதிர்ஷ்ட எண்கள்:  9, 3

மிதுனம்:

இன்று பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது, முடிந்தவரை பிறர் விஷயங்களில் தலையீடு செய்யாதிருப்பது உத்தமம். சுபகாரிய முயற்சிகளில் தடைகளுக்குப்பின்பே அனுகூலப்பலனை அடைவீர்கள். பணவரவுகள் ஓரளவுக்கு திருப்தியளிப்பதாக இருந்தாலும் பணவிஷயத்தில் பிறருக்கு முன்ஜாமீன் கொடுப்பது, வாக்குறுதி கொடுப்பது போன்றவற்றைத் தவிர்க்கவும். 

அதிர்ஷ்டநிறம்: சிவப்பு, அடர் நீலம்

அதிர்ஷ்ட எண்கள்: 5, 6

கடகம்:

இன்று பெண்களுக்கு தடைபட்ட காரியங் களை செய்து முடிக்க மீண்டும் முயற்சிகள்  மேற்கொள்வீர்கள். உற்சாகம் உண்டாகும்.பிரச்சினைகள் யாவும் படிப்படியாகக் குறைந்து மனநிம்மதி உண்டாகும். அலைச்சல், டென்ஷன்கள் மறையும். பூர்வீக சொத்துவழியில் லாபங்கள் உண்டாகும். சிலருக்கு வீடு, மனை, வண்டி, வாகனங்கள் வாங்கக்கூடிய யோகம் ஏற்படும். 

அதிர்ஷ்டநிறம்: பச்சை, மஞ்சள், நீலம்

அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7

சிம்மம்:

இன்று கணவன் மனைவிக்கிடையில் இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் எந்தவித போட்டிகளையும் சமாளித்து முன்னேற்ற மடையக்கூடிய ஆற்றலைப் பெறுவார்கள். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி தொழிலை விரிவுசெய்ய நினைக்கும் காரியங்களில் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது.

அதிர்ஷ்டநிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சை

அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5

கன்னி:

இன்று உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்க்கும் பதவி உயர்வுகள் கிடைக்கக்கூடிய வாய்ப்புகள் உண்டாகி உயரதிகாரிகளின் பாராட்டுதல்களைப் பெறுவீர்கள். உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பு களால் வேலைப்பளு குறையும். சகோதரர்களிடம் கவனமாக பேசி பழகுவது நல்லது. சிலருக்கு வெளியூர், வெளிநாடுகளுக்குச் செல்லக்கூடிய வாய்ப்பு உண்டாகும்.

அதிர்ஷ்டநிறம்: இளஞ்சிவப்பு, நீலம்

அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9

துலாம்:

இன்று உங்களின் உடல் ஆரோக்கியம் ஓரளவுக்கு சிறப்பாகவே இருக்கும். அடிக்கடி ஏதாவது பாதிப்புகள் ஏற்பட்டாலும் உடனடியாக சரியாகிவிடும். தேவையற்ற பயணங்கள் மேற்கொள்ளக்கூடிய சூழ்நிலைகளால் உடல்நிலை சோர்வடையும் என்றாலும் அதன்மூலம் ஓரளவுக்கு அனுகூலமான பலனையும் அடையமுடியும்.

அதிர்ஷ்டநிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள்

அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9

விருச்சிகம்:

இன்று மனைவி, பிள்ளைகளாலும் சிறிதளவு மருத்துவச் செலவுகளை எதிர்   கொள்வீர்கள். குடும்பத்தில் சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. உற்றார்- உறவினர்களை அனுசரித்துச்செல்வதன்மூலம் ஓரளவுக்கு அனுகூலமான பலனை அடைவீர்கள். பிள்ளைகளால் டென்ஷன் ஏற்பட்டு நீங்கும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

அதிர்ஷ்டநிறம்:  இளஞ்சிவப்பு, நீலம்

அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9

தனுசு:

இன்று திருமண சுபகாரிய முயற்சிகளை மேற்கொள்வதை சில காலம் தள்ளிவைப்பது நல்லது. புத்திரர்களால் சில மனசஞ்சலங்கள் தோன்றினாலும் பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்படாது. பொருளாதார நிலை திருப்திகரமாகவே இருக்கும். தேவையற்ற செலவுகளைக் குறைத்துக்கொண்டால் சேமிக்கமுடியும். 

அதிர்ஷ்டநிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள்

அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9

மகரம்:

இன்று கமிஷன் ஏஜென்சி, கான்டிராக்ட் போன்ற துறைகளில் உள்ளவர்கள் ஓரளவுக்கு சிறப்பான லாபத்தைப் பெறமுடியும். கொடுக்கல்-வாங்கலில் பெரிய தொகை ஈடுபடுத்துவதைத் தவிர்ப்பது நல்லது. பிறரைநம்பி முன்ஜாமீன் கொடுப்பது, வாக்குறுதிகள் கொடுப்பதைத் தவிர்ப்பது நல்லது. மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை அதிகரிக்கும். கவலை நீங்கும். 

அதிர்ஷ்டநிறம்: மஞ்சள், நீலம்

அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9

கும்பம்:

இன்று வம்பு வழக்குகளில் இழுபறியான நிலையே நீடிக்கும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் கடினமாக உழைத்தால் மட்டுமே எதிர்பார்த்த லாபத்தைப் பெறமுடியும். உற்பத்தியிலும் விற்பனையிலும் அதிக முயற்சிகளை மேற்கொண்டால் எந்த போட்டி பொறாமைகளையும் எதிர்கொள்ளக்கூடிய ஆற்றல் உண்டாகும். 

அதிர்ஷ்டநிறம்: மஞ்சள், வெள்ளை

அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9

மீனம்:

இன்று சுபவிரைய செலவுகள் அதிகரிக்கும். அடுத்தவருக்கு உதவிகள் செய்யும் போது கவனம் தேவை.  எடுத்த காரியத்தை செய்து முடிப்பதில் தாமதம் உண்டாகலாம். வெளியூர், வெளிநாடு களிலிருந்தும் ஆர்டர்கள் கிடைக்கும். வேலையாட்களின் ஒத்துழைப்பும், கூட்டாளிகளின் ஆதரவும் மனமகிழ்ச்சியை உண்டாக்கிவிடும். வாங்கிய வங்கிக்கடன்களையும் அடைத்துவிடுவீர்கள்.

அதிர்ஷ்டநிறம்: நீலம், வெளிர் பச்சை, ஆரஞ்சு

அதிர்ஷ்ட எண்கள்: 6, 9 

author avatar
seithichurul
வணிகம்1 நாள் ago

இன்று புதிய உச்சத்தை தொட்ட தங்கம், வெள்ளி விலை!

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்1 நாள் ago

இன்றைய ராசிபலன் (19/10/2024)

செய்திகள்2 நாட்கள் ago

ஆளுநர் ரவி தமிழ்த்தாய் வாழ்த்தில் ‘திராவிடம்’ நீக்கம் – முதல்வர் ஸ்டாலின் கடும் கண்டனம்!

வேலைவாய்ப்பு2 நாட்கள் ago

ஒரே நாளில் 45,000 வேலைவாய்ப்புகள்! – தமிழக அரசின் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்கள்!

ஜோதிடம்2 நாட்கள் ago

குரு வக்ர பெயர்ச்சி: நற்பலன் பெறும் ராசிகள் யாவர்?

செய்திகள்2 நாட்கள் ago

தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 3 சதவீதம் உயர்வு!

செய்திகள்2 நாட்கள் ago

இந்தி மொழி திணிப்பு இல்லை: தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கருத்து!

வணிகம்2 நாட்கள் ago

இன்று தங்கம் விலை உயர்வு(18-10-2024)!

ஜோதிடம்2 நாட்கள் ago

500 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் அதிசயம் – இந்த 3 ராசிக்காரர்களுக்கு செல்வம் குவியவிருக்கிறது!

ஆன்மீகம்2 நாட்கள் ago

தமிழ்: இவருக்கு பொன்னான மனசுப்பா! ராகு கருணை மழையாய் கொட்டுகிறார்.. அனுபவிக்கும் அதிர்ஷ்ட ராசிகள்!

வணிகம்4 நாட்கள் ago

சென்னையில் இன்று ஆபரணத் தங்கம் விலை ரூ.360 வரை உயர்வு!

வணிகம்4 நாட்கள் ago

இன்று தங்கம் விலை உயர்வு.. சவரன் எவ்வளவு?(16-10-2024)

வேலைவாய்ப்பு3 நாட்கள் ago

TNPSC குரூப் 5A வேலைவாய்ப்பு அறிவிப்பு – விண்ணப்பிக்கலாம்! முழு விவரங்கள் உள்ளே!

வணிகம்3 நாட்கள் ago

மின்னல் வேகத்தில் உயரும் தங்கம் விலை!(17-10-2024)

தமிழ்நாடு4 நாட்கள் ago

சென்னை மழைப் பேரிடரில் பாதிக்கப்பட்டோருக்கு முதல்வர் ஸ்டாலின் இலவச உணவு அறிவிப்பு!

சினிமா3 நாட்கள் ago

இயக்குனராக அவதாரம் எடுக்கும் யுவன் சங்கர் ராஜா!

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்5 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – அக்டோபர் 15, 2024

வேலைவாய்ப்பு3 நாட்கள் ago

ரூ.42,500/- சம்பளத்தில் BHEL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்4 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் (16/10/2024)

ஆன்மீகம்3 நாட்கள் ago

குரு சாட்டையை எடுத்துவிட்டார்: அக்டோபர் முதல் தங்கத்தில் அடி விழும் ராசிகள்! மகிழ்ச்சியின் திருப்பம்!