Connect with us

தினபலன்

உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (29/11/2020)

Published

on

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசிபலன், Tamil Horoscope, Daily Horoscope in Tamil, Horoscope in Tamil

29-Nov-20

ஞாயிற்றுக்கிழமை

மேஷம்:

இன்று மன சஞ்சலம் ஏற்படும். வீண் பகைகள் ஏற்பட்டு விலகும். எவ்வளவு திறமையாக செயல்பட்டாலும் பாராட்டுக்கு பதில் விமர்சனம் கிடைக்கும். திடீர் கோபம் ஏற்படும். வீண் செலவும் இருக்கும். குடும்பத்தாரிடம் பிடிவாதத்தை தவிர்ப்பது நன்மை தரும். மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெற நண்பர்களின் உதவி கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 5, 6

ரிஷபம்:

இன்று தொழில், வியாபாரம் தொடர்பான காரியங்களில் மெத்தன போக்கு காணப்படும். வாடிக்கையாளர்களிடம்  கோபமான வார்த்தைகளை பேசாமல்  சாந்தமாக உரையாடுவது வியாபார விருத்திக்கு வழி செய்யும். பணவரத்து திருப்தியாக இருக்கும். செலவும் கூடும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். சக ஊழியர்களுடன் கடுமையாக பேசாமல் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது.

அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை

அதிர்ஷ்ட எண்கள்: 2, 7

 

மிதுனம்:

இன்று குடும்பத்தில் இருப்பவர்களின் செயல்கள் உங்கள் கோபத்தை தூண்டலாம். மிகவும் கவனமாக பேசுவதும் வாக்குவாதத்தை தவிர்ப்பதும் நன்மை தரும். கணவன், மனைவிக்குள் திடீர் மன வருத்தம் ஏற்பட்டு நீங்கும். அக்கம் பக்கத்தினருடன் அனுசரித்து செல்வது நல்லது. நீண்டதூர பயணங்களால் சாதகமான பலன் கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

அதிர்ஷ்ட எண்: 2, 9

கடகம்:

இன்று பணவரத்து கூடும். அரசாங்கம் மூலம் லாபம் உண்டாகும்.  மற்றவர்கள் செயல்களால் திடீர் கோபம் உண்டாகலாம். எதிர்பார்த்த உதவி கிடைக்கும். வீண் செலவை குறைப்பது நல்லது. பிடிவாதத்தை விடுவது நன்மை தரும். அறிவுத் திறன் கூடும். பணவரத்து இருக்கும். தடைபட்ட காரியங்கள் சாதகமாக நடந்து முடியும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை

அதிர்ஷ்ட எண்: 9, 3

சிம்மம்:

இன்று சந்திரன் சஞ்சாரம் வீண் மன குழப்பங்களை ஏற்படுத்தினாலும் முடிவில் தெளிவு உண்டாகும். தேவையற்ற பிரச்சனைகளில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. சொன்ன சொல்லை காப்பாற்ற பாடுபட வேண்டி இருக்கும். தேவையான உதவிகள் தாமதமாக கிடைக்கும். உடன் பிறந்தோரிடையே உறவு பலப்படும்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம்

அதிர்ஷ்ட எண்:  4, 6

கன்னி:

இன்று வீண் கனவுகள் தோன்றும். திடீர் கோபம் தோன்றலாம். மிகவும் கவனமாக பேசுவது நன்மை தரும். தொழில், வியாபாரம் தொடர்பான அலைச்சல்கள் அதிகரிக்கும். வாடிக்கையாளர்களிடம் பேசும்போது நிதானத்தை கடை பிடிப்பது நல்லது. தொழில் முன்னேற்றம் தொடர்பான கவலை ஏற்பட்டு நீங்கும்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, வெளிர் நீலம்

அதிர்ஷ்ட எண்: 5, 6

துலாம்:

இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் ஒரு சின்ன விஷயத்திற்காக கூட அலைய வேண்டி இருக்கும். பணி சுமை காரணமாக திடீர் கோபம் உண்டாகலாம். கவனமாக செயல்படுவது நல்லது. எதிர்பார்த்த பணம் கிடைக்கும். குடும்பத்தில் தேவையற்ற குழப்பங்கள் ஏற்பட்டு சரியாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. கணவன், மனைவிக்குள் கருத்து வேற்றுமை ஏற்படலாம்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, வெளிர் நீலம்

அதிர்ஷ்ட எண்: 3, 7

விருச்சிகம்:

இன்று உங்கள் செயல்களை குடும்பத்தில் உள்ளவர்கள் குற்றம் சொல்லலாம். எனவே வாக்குவாதத்தில் ஈடுபடாமல் கண்டும் காணாமல் செல்வது நன்மை தரும். பிள்ளைகளின் எதிர்கால நலனில் ஆர்வம் காட்டுவீர்கள். கொடுத்த வாக்கை காப்பாற்ற பாடுபடுவீர்கள். மற்றவர்கள் பிரச்சனைகளில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. கோபத்தை தவிர்ப்பது நன்மை தரும்.

அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு, நீலம்

அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9

தனுசு:

இன்று மற்றவர்களுடன் இருந்த பகை நீங்கும்.  பூர்வீக சொத்துக்களில் இருந்த சிக்கல்கள் தீரும். பணம் வரும் வாய்ப்பு உள்ளது. எதிர்த்து செயல்பட்டவர்கள் ஒதுங்கி விடுவார்கள். நீண்ட  நாள் கஷ்டங்கள் நீங்கும். பல விதத்திலும் நன்மை செய்யும். மற்றவர்களுக்காக வாதாடி வெற்றி பெறுவீர்கள். புத்தி கூர்மையுடன் செயல்படுவீர்கள். தைரியம் உண்டாகும்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள்

அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9

மகரம்:

இன்று செலவுகள் அதிகரிக்கும். வேண்டியவர்களுடன் மனஸ்தாபம் உண்டாகும். தொழில், வியாபாரம் தொடர்பான செலவுகள் அதிகரிக்கும். தேவையான பண உதவி கிடைப்பதிலும், புதிய ஆர்டர்கள் கிடைப்பதிலும் தாமதம் ஏற்படும். தொழில் தொடர்பாக அமைய வேண்டி இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உழைப்பு அதிகமாகும். உத்தியோக மாற்றம் ஏற்படலாம்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்

அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9

கும்பம்:

இன்று குடும்பத்தில் திடீர் பிரச்சனைகள் ஏற்படலாம் கவனம் தேவை. குடும்ப செலவுகள் அதிகரிக்கும். ஆயுதங்கள், நெருப்புகள் பயன்படுத்தும் போது கவனம் தேவை. கணவன், மனைவிக்கிடையே வீண் வாக்கு வாதங்களை தவிர்ப்பது நல்லது. பூர்வீக சொத்துக்கள் மூலம் வரவேண்டியவை தாமதப்படும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை

அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9

மீனம்:

இன்று துணிச்சலாக எதையும் செய்து முடித்து காரிய வெற்றி அடைவீர்கள் . மற்றவர்கள் நலனை அக்கறையுடன் கவனிப்பீர்கள். செலவுகள் அதிகரிக்கும். வீண் அலைச்சல் உண்டாகும். கவனம் தேவை. எதிலும் அவசரப்படாமல் புத்திகூர்மையுடன் செயல்படுவது எதிர்கால முன்னேற்றத்திற்கு உதவும். எதிர்ப்புகள் அகலும்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம், வெளிர் பச்சை, ஆரஞ்சு

அதிர்ஷ்ட எண்கள்: 6, 9

author avatar
seithichurul
Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்18 நிமிடங்கள் ago

இன்றைய ராசி பலன் (ஆகஸ்ட் 17, 2024)

ஆரோக்கியம்10 மணி நேரங்கள் ago

பிளம்ஸ்: இயற்கையின் இனிப்பு மருந்து!

ஆரோக்கியம்10 மணி நேரங்கள் ago

பல் பொடி vs பற்பசை: எது சிறந்தது?

வேலைவாய்ப்பு10 மணி நேரங்கள் ago

ரூ.2,40,000/- ஊதியத்தில் ESIC ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

இந்தியா10 மணி நேரங்கள் ago

கர்நாடகா அரசின் SBI, PNB வங்கி கணக்குகள் மூடல் உத்தரவு: தற்காலிக நிறுத்தம்!

ஆன்மீகம்10 மணி நேரங்கள் ago

ஆவணி அவிட்டம் 2024: பூணூல் மாற்ற உகந்த நேரம் மற்றும் முக்கியத்துவம்!

வேலைவாய்ப்பு10 மணி நேரங்கள் ago

NLC ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

உலகம்10 மணி நேரங்கள் ago

H-1B விசா: இந்த ஆண்டும் இரண்டாம் சுற்று குலுக்கல்

ஆன்மீகம்10 மணி நேரங்கள் ago

புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் பொழியும்!

ஆரோக்கியம்10 மணி நேரங்கள் ago

தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிட வேண்டும் என்பதற்கான 9 காரணங்கள்!

வணிகம்5 நாட்கள் ago

ஒரு ஆண்டில் 42,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த ரிலையன்ஸ்!

வணிகம்4 நாட்கள் ago

இன்று தங்கம் விலை உயர்வு!(12-08-2024)

சினிமா3 நாட்கள் ago

டிமாண்டி காலனி 2 விமர்சனங்கள்: ரசிகர்கள் சொல்லும் கருத்துக்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்4 நாட்கள் ago

பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (PMAY)- நகர்ப்புறம் 2.0-க்கு அமைச்சரவை ஒப்புதல்: தகுதி என்ன? மானியம் எவ்வளவு? முழுவிவரம்

சினிமா2 நாட்கள் ago

தங்கலான் திரைப்படம்: விமர்சனம், ரேட்டிங், ரிலீஸ் விவரங்கள்!

வணிகம்3 நாட்கள் ago

அதிரடியாக தங்கம் விலை உயர்வு.. சவரன் எவ்வளவு?(13-08-2024)

வணிகம்3 நாட்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் குறையும் தங்கம் விலை (14/08/2024)!

வணிகம்3 நாட்கள் ago

தங்கம் வாங்குவது நல்லதா? தங்கம் மியூச்சுவல் ஃபண்ட் வாங்குவது நல்லதா?

பர்சனல் ஃபினான்ஸ்7 நாட்கள் ago

ஓய்வு காலத்தில் நிலையான மாத வருமானம் வழங்கும் 5 சிறந்த திட்டங்கள்!

வணிகம்6 நாட்கள் ago

செபி தலைவர் மீதான ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டு: அதிர்ச்சியளிக்கும் புகார்