Connect with us

தினபலன்

இன்று இந்த ராசிக்கு மகிழ்ச்சி பொங்கும்.. உங்கள் ராசிபலன் (26/01/2021)

Published

on

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசிபலன், Tamil Horoscope, Daily Horoscope in Tamil, Horoscope in Tamil

26-Jan-21

செவ்வாய்கிழமை

மேஷம்:

இன்று குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். கணவன் மனைவிக்கிடையே இருந்த பிரச்சனைகள் தீரும். பிள்ளைகள்  விரும்பும் பொருள்களை வாங்கி கொடுத்து அவர்களை மகிழ்ச்சி அடைய செய்வீர்கள். வீடு, வாகனம் போன்றவற்றை வாங்குவது, புதுப்பிப்பது போன்றவற்றில் ஈடுபடுவீர்கள். உங்களது ஆலோசனையை கேட்டு அதன்படி சிலர் நடந்து காரிய வெற்றி அடைவார்கள்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம்

அதிர்ஷ்ட எண்:  4, 6

ரிஷபம்:

இன்று இழுபறியாக இருந்த வேலைகள் சாதகமாக நடந்து முடியும். மனம் மகிழும்படியான சம்பவங்கள் நடக்கும். மாணவர்களுக்கு சகமாணவர்களை  அனுசரித்து செல்வது நன்மை தரும். கல்வியில் ஆர்வம் உண்டாகும். தேவையான பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். மாணவர்கள் வீண் அலைச்சலை குறைத்துக் கொண்டு கல்வியில் கவனம் செலுத்துவது நன்மை தரும்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, வெளிர் நீலம்

அதிர்ஷ்ட எண்: 5, 6

மிதுனம்:

இன்று எதிலும் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. வீண் அலைச்சல் காரிய தடை ஏற்படலாம். எந்த காரியத்தையும் ஒருமுறைக்கு பலமுறை யோசித்து செய்வது நல்லது. எல்லா வசதிகளும் உண்டாகும். நோய் நீங்கி ஆரோக்கியம் பெறுவீர்கள். மனநிம்மதி உண்டாகும்.எதிலும் நேரிடையாக ஈடுபடாமல் மறைமுகமாக காரியம்  சாதித்துக் கொள்வீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, வெளிர் நீலம்

அதிர்ஷ்ட எண்: 5, 6

கடகம்:

இன்று மனதில் தைரியமும், தன்னம்பிக்கையும் பிறக்கும். தாயின் உடல் ஆரோக்கியத்தில்  கவனம் தேவை. நண்பர்கள், உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். தந்தையுடன் மனஸ்தாபம் ஏற்படலாம். எதிர்பாராத காரிய தடைகள் வரும். வாகனங்களில் செல்லும் போது மிகவும் கவனம் தேவை.மனதில் இருந்த கவலை நீங்கி தைரியம் உண்டாகும். எதிலும் லாபம் உண்டாகும்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள், நீலம்

அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7

சிம்மம்:

இன்று தொழில் வியாபாரத்தில் சுமாரான போக்கு காணப்படும். புதிய ஆர்டர்கள் கிடைப்பதில் தாமதம் ஏற்படலாம். உத்தியோகத்தில்  இருப்பவர்கள் நம்பிக்கையுடன் செயலாற்றுவதன் மூலம் நன்மை அடைவார்கள். அலுவலக பணிகளில் தாமதம் ஏற்படலாம். எல்லா நன்மையும் உண்டாகி உடல் ஆரோக்கியம் பெறும். வாக்கு வன்மையால் எந்த காரியத்தையும் சுலபமாக செய்து முடிப்பீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சை

அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5

கன்னி:

இன்று குடும்பத்தினருக்கு தேவையான பொருள்களை வாங்குவீர்கள். கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை காணப்படும். பிள்ளைகளின் கல்வி அவர்களது செயல்களில் கவனம் செலுத்துவீர்கள். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட கூடுதல் லாபம் கிடைக்க பெறுவீர்கள். புதிய ஆர்டர்கள் கிடைக்கும். வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள்.

அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு, நீலம்

அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9

துலாம்:

இன்று எதிலும் எதிர்பாராத தடைகள் உண்டாகலாம். தன்னம்பிக்கையுடன்  செயல்பட்டு காரிய வெற்றி அடைவீர்கள். மாணவர்கள் கூடுதல் நேரம் ஒதுக்கி நம்பிக்கையுடன் பாடங்களை படிப்பது வெற்றிக்கு உதவும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலைபளு குறைந்து மகிழ்ச்சியுடன் காணப்படுவார்கள். பணவரத்தும் திருப்தியாக இருக்கும். எல்லாவற்றிலும் முன்னேற்றம் காணப்படும்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள்

அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9

விருச்சிகம்:

இன்று வீண் விவகாரங்களை தவிர்ப்பது நல்லது. காரிய தடை தாமதம், வீண் அலைச்சல் உண்டாகலாம். எந்த விஷயத்தையும் எளிதாக எடுத்துக் கொள்வீர்கள். எடுத்த காரியங்களை  செய்து முடிப்பதில் தடை தாமதம் ஏற்படும். வீண் வழக்குகள் வரலாம். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். கணவன், மனைவிக் கிடையே நெருக்கம் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்

அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9

தனுசு:

இன்று உஷ்ண சம்பந்தமான நோய் உண்டாகலாம் கவனம் தேவை. வீண் அலைச்சலை சந்திக்க நேரிடும்.  பயணம் செல்ல வேண்டி இருக்கும். எதிர்பாலினத்தாரிடம் பழகும் போது கவனம் தேவை. விருப்பத்திற்கு மாறான சம்பவங்கள் நடக்கலாம். குழந்தைகள் எதிர்கால நலனில் அக்கறை காட்டுவீர்கள். நண்பர்கள் உறவினர்கள் மூலம் தேவையான உதவி கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை

அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9

மகரம்:

இன்று தொழில் வியாபாரத்தில் குறிப்பாக கூட்டு தொழிலில் ஈடுபட்டு இருப்பவர்கள் எச்சரிக்கையாக செயல்படுவது நல்லது. வாடிக்கையாளர்களை அனுசரித்து செல்வது வியாபார மேன்மைக்கு உதவும். மாணவர்கள் கல்வியில் எதிர்பார்க்கும் வெற்றி கிடைக்கப்பாடுபடுவீர்கள். எதிலும் முன்னேற்றம் உண்டாகும். காரியதடை நீங்கும். குடும்பத்தில் ஒற்றுமை உண்டாகும்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம், வெளிர் பச்சை, ஆரஞ்சு

அதிர்ஷ்ட எண்கள்: 6, 9

கும்பம்:

இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் அதிகமாக உழைக்க வேண்டி இருக்கும். முக்கிய பொறுப்புகளில் இருப்பவர்கள் கவனமாக இருப்பது நல்லது. குடும்பத்தில் திடீரென்று பிரச்சனைகள் தோன்றலாம். வழக்குகளில் சாதகமான நிலை காணப்படும்.  எதிர்ப்புகள்  விலகும். சாமர்த்தியமான பேச்சின் மூலம் காரிய வெற்றி காண்பீர்கள். மனக்கவலை நீங்கும். பணவரத்துகூடும்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை

அதிர்ஷ்ட எண்கள்: 2, 7

மீனம்:

இன்று கணவன், மனைவிக்கிடையே  மனவருத்தம் ஏற்படும்படி சம்பவம் நிகழலாம். பிள்ளைகளின் செயல்பாடுகள் திருப்தி தருவதாக இருக்கும். மனக்கவலை ஏற்படலாம். முயற்சிகளில் தடை ஏற்படலாம். எதிலும் எச்சரிக்கை தேவை. அவ்வப்போது செய்வது சரிதானா என்ற தயக்கம் ஏற்படும். எந்த ஒரு காரியத்தையும் சிறப்பாக செய்து முடிப்பீர்கள். பணவரத்து அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு

அதிர்ஷ்ட எண்: 9, 3

author avatar
seithichurul
சினிமா6 மணி நேரங்கள் ago

கோல்ட் கேஸ்: ஓடிடி திரையை உலுக்கிய மர்ம திரில்லர்!

ஜோதிடம்7 மணி நேரங்கள் ago

6 நாளில் சுக்கிரன் பெயர்ச்சி: பணம், புகழ், அதிர்ஷ்டம்!

மாதபலன்,ராசிபலன், Monthly Prediction
மாத பலன்7 மணி நேரங்கள் ago

ஆவணி மாத ராசி பலன் 2024!

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்19 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பலன் (ஆகஸ்ட் 17, 2024)

ஆரோக்கியம்1 நாள் ago

பிளம்ஸ்: இயற்கையின் இனிப்பு மருந்து!

ஆரோக்கியம்1 நாள் ago

பல் பொடி vs பற்பசை: எது சிறந்தது?

வேலைவாய்ப்பு1 நாள் ago

ரூ.2,40,000/- ஊதியத்தில் ESIC ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

இந்தியா1 நாள் ago

கர்நாடகா அரசின் SBI, PNB வங்கி கணக்குகள் மூடல் உத்தரவு: தற்காலிக நிறுத்தம்!

ஆன்மீகம்1 நாள் ago

ஆவணி அவிட்டம் 2024: பூணூல் மாற்ற உகந்த நேரம் மற்றும் முக்கியத்துவம்!

வேலைவாய்ப்பு1 நாள் ago

NLC ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

சினிமா3 நாட்கள் ago

டிமாண்டி காலனி 2 விமர்சனங்கள்: ரசிகர்கள் சொல்லும் கருத்துக்கள்!

வணிகம்5 நாட்கள் ago

இன்று தங்கம் விலை உயர்வு!(12-08-2024)

பர்சனல் ஃபினான்ஸ்5 நாட்கள் ago

பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (PMAY)- நகர்ப்புறம் 2.0-க்கு அமைச்சரவை ஒப்புதல்: தகுதி என்ன? மானியம் எவ்வளவு? முழுவிவரம்

வணிகம்6 நாட்கள் ago

ஒரு ஆண்டில் 42,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த ரிலையன்ஸ்!

வணிகம்3 நாட்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் குறையும் தங்கம் விலை (14/08/2024)!

சினிமா3 நாட்கள் ago

தங்கலான் திரைப்படம்: விமர்சனம், ரேட்டிங், ரிலீஸ் விவரங்கள்!

வணிகம்4 நாட்கள் ago

அதிரடியாக தங்கம் விலை உயர்வு.. சவரன் எவ்வளவு?(13-08-2024)

வணிகம்4 நாட்கள் ago

தங்கம் வாங்குவது நல்லதா? தங்கம் மியூச்சுவல் ஃபண்ட் வாங்குவது நல்லதா?

வணிகம்7 நாட்கள் ago

செபி தலைவர் மீதான ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டு: அதிர்ச்சியளிக்கும் புகார்

வணிகம்4 நாட்கள் ago

ஐடி துறையில் தொடரும் பணி நீக்கம்: 1,30,000 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் இதுவரை பாதிப்பு!