Connect with us

தினபலன்

உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (20/01/2021)

Published

on

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசிபலன், Tamil Horoscope, Daily Horoscope in Tamil, Horoscope in Tamil

20-Jan-21

புதன்கிழமை

மேஷம்:

இன்று குடும்பத்தினருடன் விருந்து கேளிக்கை நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் வாய்ப்பு வரும். எதிலும் எச்சரிக்கையும் கவனமும் தேவை. தொழில் வியாபாரம் சிறப்படையும். புதிய ஆர்டர்கள் பெறுவதில் உற்சாகமாக ஈடுபடுவீர்கள். எந்த ஒரு முடிவையும் எடுக்கும்போது ஒருமுறைக்கு பலமுறை யோசிப்பது நல்லது. மற்றவர்களிடம் பகைமை பாராட்டுவதை தவிர்ப்பது நல்லது.

அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை

அதிர்ஷ்ட எண்கள்: 2, 7

ரிஷபம்:

இன்று பழைய பாக்கிகளை வசூல் செய்வதில் வேகம் இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் திறமையாக செயல்பட்டு பணிகளை வெற்றிகரமாக செய்து முடித்து மேல் அதிகாரிகளின் நன்மதிப்பை பெறுவார்கள். குடும்பத்தில் சுமுகமான சூழ்நிலை உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே இருந்த பிரச்சனைகள் குறையும் விருந்தினர் வருகை இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்

அதிர்ஷ்ட எண்கள்: 3, 5

மிதுனம்:

இன்று குடும்பத்தில் இருந்த டென்ஷன் விலகும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் உண்டாகும். சகோதரர் மூலம் நன்மை ஏற்படும்.  பிள்ளைகள் எதிர் காலம் குறித்து சிந்தனை மேலோங்கும். உறவினர்கள், நண்பர்களின் உதவியும் கிடைக்கும். குழந்தைகளின் எதிர்கால நலனில் அக்கறை காட்டுவீர்கள். மாணவர்கள் கல்வி தொடர்பான விஷயங்களில் முடிவு எடுக்கும் போது தீர ஆலோசித்து செயல்படுவது நல்லது.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெள்ளை

அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9

கடகம்:

இன்று திறமையாக பேசுவதன் மூலம் காரிய அனுகூலம் உண்டாகும். தெளிவான சிந்தனை இருக்கும். மாணவர்கள் பாடங்களை படிப்பதில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். மனதில் உற்சாகம் உண்டாகும். புதிய முயற்சிகளில் தாமதம் ஏற்படலாம். எதிர்பார்த்த காரிய வெற்றி உண்டாகும். புத்திசாதூரியத்தால் எதையும் செய்து முடிக்க முடியும். அனுபவபூர்வமான அறிவுத்திறன் கை கொடுக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் நீலம், மஞ்சள்

அதிர்ஷ்ட எண்கள்: 4, 6

சிம்மம்:

இன்று காரியதடை நீங்கும். மன அமைதி ஏற்படும். வாழ்க்கை சிறப்படையும். கட்டுபாடு  இல்லாமல் சுதந்திரமாக செயலாற்ற வேண்டும் என்ற எண்ணம் அதிகரிக்கும். திடீர் கோபம் டென்ஷன் ஏற்படலாம். கட்டுப்படுத்திக் கொள்வது நல்லது. பண வரத்து தாமதப்படும். மற்றவர்களுடன் வீண் வாக்கு வாதங்களை தவிர்ப்பது நன்மைதரும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை

அதிர்ஷ்ட எண்கள்: 3, 5

கன்னி:

இன்று வீண் அலைச்சல், மனக்குழப்பம் உண்டாகலாம். பணவரத்து இருக்கும். இழுபறியான காரியங்கள் சாதகமாக முடியும். எதிலும் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது. தொழில் வியாபாரம் தொடர்பான சில முக்கிய  முடிவுகள் எடுக்க நேரிடும். பணவரத்து தாமதப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக ஊழியர்களுடன் கவனமாக பழகுவது நல்லது.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, பிரவுன்

அதிர்ஷ்ட எண்கள்: 2, 6

துலாம்:

இன்று தொழில் வியாபாரம் தொடர்பாக அலைய வேண்டி இருக்கும். வாடிக்கையாளர்களை அனுசரித்து செல்வது நன்மை தரும். முக்கிய முடிவு எடுக்கும் போது தடுமாற்றம் ஏற்படலாம். குடும்பத்தில் திடீர் பிரச்சனை தலை தூக்கும். மிகவும் கவனமாக கையாண்டால் அது தீரும். கணவன், மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை ஏற்படலாம். உறவினர்கள், நண்பர்களிடம் கவனமாக பழகுவது நல்லது.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெளிர் பச்சை

அதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 6

விருச்சிகம்:

இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் குறிக்கோள் இன்றி வேலை செய்ய வேண்டி இருக்கும். உத்தியோகம் தொடர்பான இடமாற்றம் உண்டாகலாம். குடும்பத்தில் எதிர்பாராத திடீர் செலவு ஏற்படலாம். பயணங்கள் செல்ல வேண்டி இருக்கும். அடுத்தவரின் உதவி கிடைக்கும். புதிய பொறுப்புகள் ஏற்க வேண்டி இருக்கும். செயல் திறன் அதிகரிக்கும். பிள்ளைகள் உங்கள் ஆலோசனையை கேட்காமல் தன்னிச்சையாக முடிவு எடுக்கலாம்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை

அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 9

தனுசு:

இன்று கணவன் மனைவிக்கிடையே விட்டு கொடுத்து செல்வது நல்லது. பிள்ளைகளிடம் பக்குவமாக நடந்து கொள்வது நன்மை தரும். உறவினர்கள் நண்பர்கள் வருகை இருக்கும். அனுபவபூர்வமான அறிவைக்கொண்டு எதையும் சாதிப்பீர்கள். வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நன்மை தரும். வழக்கு விவகாரங்கள் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும். எதிர்ப்புகள் விலகும். பொருளாதாரம் உயரும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, சிவப்பு

அதிர்ஷ்ட எண்கள்: 6, 9

மகரம்:

இன்று கோபத்தை கட்டுப்படுத்திக் கொண்டு அமைதியை கடைபிடிப்பதன் மூலம் எல்லாவற்றிலும் அனுகூலம் உண்டாகும். டென்ஷனை குறைப்பது நல்லது. மாணவர்கள் கவனத்தை சிதறவிடாமல்  பாடங்களை படிப்பது வெற்றிக்கு உதவும். எதிலும் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. பொறுப்புகள் அதிகரிக்கும். காரிய வெற்றி உண்டாகும். மனமகிழ்ச்சி கூடும்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, நீலம்

அதிர்ஷ்ட எண்கள்: 3, 9

கும்பம்:

இன்று எல்லாவகையிலும் நன்மை உண்டாகும். எதிலும் சாதகமான பலன் கிடைக்கும். மற்றவர்களுக்கு உதவி செய்து அதன் மூலம் நன்மதிப்பு பெறுவீர்கள். உடல் ஆரோக்கியம் உண்டாகும். பணவரத்து திருப்தி தரும். மாணவர்கள் கல்வியில் முன்னேற்றமடைய தேவையான உதவிகள் கிடைக்கும்.காரியதடை தாமதம் நீங்கும். நினைத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 1, 5

மீனம்:

இன்று பயணங்கள் செல்ல நேரிடும். விருந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் சூழ்நிலை வரும். முக்கிய நபர்களின் உதவி கிடைக்கும். சிலர் புதிய வாகனம் வாங்குவார்கள். வீண்கவலை விலகும். அடுத்தவர் விஷயங்களில் தலையிடுவதை தவிர்க்கவும். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் பார்ட்னருடன் அனுசரித்து செல்வது நல்லது.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 5, 6

ஆன்மீகம்38 நிமிடங்கள் ago

72 ஆண்டுகளுக்குப் பிறகு சனியின் கோபத்தில் சிக்கும் 5 ராசிகள்!

ஆரோக்கியம்49 நிமிடங்கள் ago

ஏலக்காய்: சுவையும், மருந்தும் கொண்ட ஒரு அற்புதமான மசாலா!

ஆன்மீகம்1 மணி நேரம் ago

ஆடி சிறப்பு கூழ்: புத்துணர்ச்சி தரும் ஊட்டச்சத்து நிறைந்த செய்முறை

ஜோதிடம்1 மணி நேரம் ago

சனி பெயர்ச்சி பலன் 2024: பாடாய் படுத்தும் அஷ்டமத்து சனி; கஷ்டங்கள் நீங்க சிம்பிள் பரிகாரம்!!

வேலைவாய்ப்பு2 மணி நேரங்கள் ago

TNPSC குரூப் 2, 2A – 2300+ அரசு வேலைகள்: நாளை கடைசி நாள்!

ஆரோக்கியம்2 மணி நேரங்கள் ago

மழைக்காலத்தில் ஏசி பயன்படுத்துவது எப்படி?

செய்திகள்2 மணி நேரங்கள் ago

தமிழ்நாடு உருவான வரலாறு: ஒரு சுருக்கமான பார்வை

வணிகம்2 மணி நேரங்கள் ago

நகை பிரியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி! தங்கம் விலை கணிசமாக குறைந்தது! (18/07/24)

செய்திகள்2 மணி நேரங்கள் ago

ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு.. துவரம் பருப்பு, பாமாயில் கொள்முதலுக்கு டெண்டர் வெளியீடு!!

இந்தியா11 மணி நேரங்கள் ago

குஜராத்தில் பரவும் சண்டிபூர் வைரஸ் தொற்று பரவல்.. 5 பேர் உயிரிழப்பு: முழு விவரம்

ஆன்மீகம்2 நாட்கள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை2 நாட்கள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்5 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்2 நாட்கள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

வணிகம்3 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

உலகம்2 நாட்கள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு7 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

பல்சுவை5 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

வணிகம்3 நாட்கள் ago

புதுமைக்கான உலக திறன் மையங்களின் மையம் தமிழ்நாடு! 50 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாக்கம்!

சினிமா6 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!