தினபலன்

உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (10/12/2020)

Published

on

10-12-2020

வியாழக்கிழமை

மேஷம்:

இன்று மற்றவர்களுக்கு ஆலோசனை கூறும் நிலை உருவாகலாம். ஆடை, ஆபரணம் வாங்குவதால் செலவு உண்டாகும். தொழில் வியாபாரம் தொடர்பான செலவுகள்  அதிகரிக்கும். எதிலும் ஒரு முறைக்கு மறுமுறை யோசித்து முடிவெடுப்பது நல்லது.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

அதிர்ஷ்ட எண்கள்: 5, 7

 

ரிஷபம்:

இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது.  இல்லையெனில் பலரையும் விரோதித்துக்கொள்ள வேண்டி இருக்கும். வரவேண்டிய பணம் வந்து சேரும். குடும்பத்தில் இருப்பவர்கள் உங்கள் யோசனையை கேட்டு நடந்துகொள்வது மனதுக்கு திருப்தியை தரும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

அதிர்ஷ்ட எண்கள்: 6, 9

 

மிதுனம்:

இன்று கணவன், மனைவிக்கிடையே  இருக்கும் அன்பு நீடிக்கும்.  பிள்ளைகளுக்கு தேவையான பொருட்களை வாங்கி கொடுத்து மகிழ்வீர்கள். விருந்தினர் வருகை இருக்கும். உங்களது ஆலோசனையை கேட்டு அதன்படி சிலர் நடந்து காரிய வெற்றி அடைவார்கள்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

அதிர்ஷ்ட எண்கள்: 5, 9

 

கடகம்:

இன்று தேவையான பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். மாணவர்கள் வீண் அலைச்சலை குறைத்துக் கொண்டு கல்வியில் கவனம் செலுத்துவது நன்மை தரும். மனநிம்மதி உண்டாகும்.எதிலும் நேரிடையாக ஈடுபடாமல் மறைமுகமாக காரியம்  சாதித்துக் கொள்வீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெளிர் பச்சை

அதிர்ஷ்ட எண்கள்: 3, 7

 

சிம்மம்:

இன்று மனதில் இருந்த கவலை நீங்கி தைரியம் உண்டாகும். எதிலும் லாபம் உண்டாகும். எல்லா நன்மையும் உண்டாகி உடல் ஆரோக்கியம் பெறும். வாக்கு வன்மையால் எந்த காரியத்தையும் சுலபமாக செய்து முடிப்பீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம், வெளிர் பிரவுண்

அதிர்ஷ்ட எண்கள்: 2, 6

 

கன்னி:

இன்று தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட கூடுதல் லாபம் கிடைக்க பெறுவீர்கள். புதிய ஆர்டர்கள் கிடைக்கும். வாடிக் கையாளர்கள் தேடி வருவார்கள்.  உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலைபளு குறைந்து மகிழ்ச்சியுடன் காணப்படுவார்கள். பணவரத்தும் திருப்தியாக இருக்கும். எல்லாவற்றிலும் முன்னேற்றம் காணப்படும்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 9

 

துலாம்:

இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். கணவன், மனைவிக் கிடையே நெருக்கம் அதிகரிக்கும். குழந்தைகள் எதிர்கால நலனில் அக்கறை காட்டுவீர்கள். நண்பர்கள் உறவினர்கள் மூலம் தேவையான உதவி கிடைக்கும். வழக்குகளில் சாதகமான நிலை காணப்படும்.  எதிர்ப்புகள்  விலகும்.

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் மஞ்சள்

அதிர்ஷ்ட எண்கள்: 3, 9

 

விருச்சிகம்:

இன்று சாமர்த்தியமான பேச்சின் மூலம் காரிய வெற்றி காண்பீர்கள். மனக்கவலை நீங்கும். பணவரத்துகூடும். மாணவர்கள் கல்வியில் எதிர்பார்க்கும் வெற்றி கிடைக்கப்பாடுபடுவீர்கள்.  எதிலும் முன்னேற்றம் உண்டாகும்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள்

அதிர்ஷ்ட எண்கள்: 5, 9

 

தனுசு:

இன்று காரியதடை நீங்கும். குடும்பத்தில் ஒற்றுமை உண்டாகும். அவ்வப்போது செய்வது சரிதானா என்ற தயக்கம் ஏற்படும். எந்த ஒரு காரியத்தையும் சிறப்பாக செய்து முடிப்பீர்கள். பணவரத்து அதிகரிக்கும். அடுத்தவர்களிடம் பொறுப்புக்களை ஒப்படைக்காமல் நேரடியாக செய்வது நன்மை தரும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

அதிர்ஷ்ட எண்கள்: 5, 6

 

மகரம்:

இன்று தொழில் வியாபாரம் தொடர்பாக அதிகம் உழைக்க  வேண்டி இருக்கும். அதற்கேற்ற பலனும் கிடைக்க பெறுவீர்கள்.  நிலுவையில் உள்ள பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களின் நிர்வாக திறமை பளிச்சிடும். எதிர்ப்புகள் குறையும். காரியதடை அகலும்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை, வெளிர் சிவப்பு

அதிர்ஷ்ட எண்கள்: 1, 3

 

கும்பம்:

இன்று எந்திரங்கள் மற்றும் தீ ஆகியவற்றை கையாளும்போது கவனம் தேவை. குடும்பத்தில் திடீர் குழப்பங்கள் தலை தூக்கும். அமைதியாக இருக்க முயன்றாலும் கூட மற்றவர்கள் வலுக்கட்டாயமாக பேசுவார்கள்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள்

அதிர்ஷ்ட எண்கள்: 2, 7

 

மீனம்:

இன்று கணவன், மனைவி ஒருவருக்கொருவர் அனுசரித்து செல்வது நல்லது. பிள்ளைகள் நலனில் அக்கறை தேவை.  அக்கம்பக்கத்தினரிடம்  சில்லறை சண்டைகள் ஏற்படலாம். எந்த ஒரு வேலையையும்  அடுத்தவரை நம்பி ஒப்படைக்காமல் நேரடியாக கவனிப்பது நன்மை தரும். பணவரத்து எதிர்பார்த்தபடி இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு

அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9

author avatar
seithichurul

Trending

Exit mobile version